கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்

nattu maruthuvam

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்  கருஞ்சீரகம்  அனைத்து நோய்களுக்கும் நல்ல நிவாரணியாகும்.  

கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும். கருஞ்சீரகம் கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது. இதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியது.

கருஞ்சீரகம் பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வர புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.

புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து. புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடமாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்

 89 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *