நாவல்பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல்பழத்தின் மருத்துவ குணங்கள்

nattu maruthuvam உணவு நலம் வாழ்வு நலம் செரிமான பிரச்சனை நாட்டு மருத்துவம்

நாவல்பழத்தின் மருத்துவ குணங்கள் நாவல்பழம் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.  

நாவல் மரத்தின் பழம், விதை, இலை, பட்டை என அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நாவல்பழத்தில் அதிகம் கால்சியம் உள்ளது. தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும். வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

பித்தத்தைத் தணிக்க, மலச்சிக்கலை  குணப்படுத்த, இதயத்தை சீராக இயங்கச் செய்ய, இரத்த சோகைநோயைக் குணப்படுத்த, சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும்.

சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.  தோள்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும். பசியைத் தூண்டக்கூடியது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து நாவல் பழம்.

நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும்.

நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடைகிறது.

திருமணமான பல பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படுவது இக்காலங்களில் அதிகரித்து வருகிறது. கருப்பையில் சினைமுட்டைகள் வளர்ச்சிபெறாமல் இருப்பது, கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுகள் ஆகியவற்றின் காரணமாக பெண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகிறது. நாவல் பழங்களை பழமாகவோ அல்லது ஜூஸ் போட்டு தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே மலட்டுதன்மை தீரும்.

வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது. சிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிட அசிடிட்டி பிரச்சனை உடனே சரியாகும்.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.

நாவல் பழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாவல் பழங்களை நன்றாக சாறு பிழிந்து அந்த சாற்றில் சிறிது உப்பு கலந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

நாவல் பழத்தினை  அளவாக சாப்பிட்டு வந்தால், தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

நாவல் பலம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இரும்புசத்து, பாஸ்பரஸ், ரைபோபிளவின், தயாமைன் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

சிலருக்கு சருமத்தில் வெள்ளை நிற புள்ளிகள் ஏற்பட்டு  உடல் அழகை கெடுக்கிறது. இவர்கள் தினமும் நாவல்பழங்களை சாப்பிட்டு வந்தால் தங்களின் உடலில் தோலின் நிறத்தை மேம்படுத்தும் மெலனின் என்கிற புரத சத்தை ஊக்குவித்து தோலில் ஏற்பட்டிருக்கும் வெள்ளை புள்ளிகளை மறைய செய்யும். தோலின் பளபளப்பு தன்மையையும் கூட்டும்.

 119 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *