நெய்

நெய்யில் இருக்கும் மருத்துவ குணங்கள்****

nattu maruthuvam அழகு குறிப்புகள் உணவு நலம் வாழ்வு நலம் செரிமான பிரச்சனை நாட்டு மருத்துவம்

நெய்யில் இருக்கும் மருத்துவ குணங்கள் **** நெய்யில் அதிக கலோரிகள் இருப்பதானால் அளவாக சாப்பிட்ட அனைத்துமே நல்லது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்துவிடும்.
அழகை பராமரிக்க உகந்தது : சிறந்த அழகுப்பராமரிப்புப் பொருளாகவும் நெய் பயன்படுகிறது. அதாவது முகத்தில் ஏற்படும் கருவளையம், உதட்டுக் கருமை, வறண்ட சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்னை ஆகியவற்றிற்கு நெய் உதவுகிறது.
நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.
குடற்புண் உள்ளவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும்.
பருமனைக் குறைக்கும் :நெய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்துக் கட்டுக்கோப்பாக வைக்க நெய் உதவுகிறது.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் உள்ளன. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.
புற்றுநோயை தடுக்கும் : இது உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்றுநோய் பிரச்னை வராமல் தடுக்கிறது.
பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக இருக்கின்றன.
வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
அமிலங்களை சமன்படுத்தும் : மன அழுத்தம்இ உடல் சோர்வு, மனச்சோர்வு எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றால் உடலில் அமிலங்கள் சுரக்கின்றன.
நெய் மருத்துவ பொருளாக மட்டும் அல்ல தினசரி உணவிலும் ஒரு அங்கமாக இருந்தது. இத்தகைய சிறப்பான நெய்யை சிறிதளவு பாலுடன் சேர்த்து பருகுவதால்
செரிமானம் சீராகும் பாலுடன் நெய் சேர்த்து பருகுவதால் கிடைக்கும் உடனடி பலன் செரிமானம் சீராவது.
கொழுப்பு நீக்கம் : நெய், வெண்ணையிலிருந்து உருக்கி எடுக்கப்படுவது நெய் அனைவரும் அறிந்ததே. பாலிலிருந்து வெண்ணை எடுக்கும்போதே, அதில் இருக்கும் சர்க்கரை, கெட்ட கொழுப்புகள் நீக்கப்படுகின்றன. நெய்யை காற்றுப் புகாதவாறு அடைத்து வைத்தால், ஒரு வருடம் வரையில் பயன்படுத்தலாம்.
நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலம், கல்லீரலால் எளிதில் உறிஞ்சப்பட்டு ஆற்றலாக மாறுகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாகும். விளையாட்டு வீரர்கள் நெய்யை ஆற்றலுக்கான துண்டுகோலாக உணவுடன் சேர்த்துக் கொள்கின்றனர்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நெய் சாப்பிடலாம். நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால், உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்துக் கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
செரிமானத்தை மேற்கொள்ளும் சுரப்புநீர்களை நெய் தூண்டுகிறது. இதனால் செரிமானம் சீராகிறது. செரிமானம் சீராக அமைந்தாலே, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் எடை சீரடையும். செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கும் நெய் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆயுர்வேதத்தில், நோய்களுக்கு மருந்தாக மூலிகைகளை அளிக்கும் போது அதோடு நெய்யும் பயன்படுத்தப்படும். அதற்குக் காரணம் நெய் மூலிகையில் உள்ள மருந்துகளை உள்ளிழுத்து, அந்தந்த பாகங்களுக்கு சீராக அனுப்புகிறது.
மன அழுத்தம், உடல் சோர்வு, மனச்சோர்வு , எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றால் உடலில் அமிலங்கள் சுரக்கின்றன. அவை ஒட்டுமொத்தமாக கெட்ட கொழுப்புகளாக உடலில் சேர்ந்து, உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றன.

 137 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *