கார்போக-அரிசி

கார்போக அரிசியில் உள்ள மருத்துவ குணங்கள்

nattu maruthuvam அழகு குறிப்புகள்

கார்போக அரிசியில் உள்ள  மருத்துவ குணங்கள் கார்போக அரிசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அனைத்து வகையான தோல் நோய்களையும் குணப்படுத்த கூடியவை.

வெண்குஷ்டம், வெண்புள்ளிகளை சரிசெய்யும் தன்மை உடையது கார்போக அரிசி. புற்றுநோயை தடுக்கும் கார்போக அரிசி பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்கவல்லது.

வெண்புள்ளி, வெண் குஷ்டம் போன்றவற்றுக்கு மருந்துதாகவும், உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதுகார்போக அரிசி. கார்போக அரிசிக்கு, ‘குஷ்ட நாசினி’, ‘சோமவள்ளி’ என்ற பெயர்கள் உள்ளன.

கார்போக அரிசியை சுத்திகரித்துதான் பயன்படுத்த வேண்டும். கார்போக அரிசியை பசு மாட்டு சிறுநீரகத்தில் ஒருநாள் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம்.

Buy help: https://www.amazon.in/dp/B07YRS11MK?ref=myi_title_dp

அல்லது எழுமிச்சை சாறில் ஊற வைத்து  வெயிலில் காயவைத்து பொடியாக்கி எடுத்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால்தான் கார்போக அரிசியில் உள்ள தேவையற்ற நச்சு போகும். கசப்புதன்மை கொண்ட கார்போக அரிசியை அப்படியே பயன்படுத்தினால் வாந்தி ஏற்படும்.

கார்போக அரிசியை பயன்படுத்தி உடலுக்கு தேய்த்து குளிக்கும் குளியல் பவுடர் தயாரிக்கலாம்.

100 கிராம் கார்போக அரிசி, 400 கிராம் பாசி பயிறு, 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடி ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.

தண்ணீர் கலந்து உடலில் பூசலாம். குளியல் பவுடராகவும் இதை பயன்படுத்த உடலில் உள்ள துர்நாற்றம் போக்கும். வேர்குரு, தோல்நோய்கள் சரியாகும்.

கார்போக அரிசியை பயன்படுத்தி சொறி, சிரங்குக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கார்போக அரிசியை தண்ணீரில் ஊரவைத்து அதனுடன் பால்சேர்த்து பேஸ்டாக அரைக்கவும்.அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாக காய்ச்ச வேண்டும்.

இதை வடிகட்டி தேமல் இருக்கும் இடத்தில் மேல்பூச்சு பூசலாம். நீண்ட நேரத்துக்கு இந்த பூச்சை வைத்திருக்க கூடாது. உடலில் எரிச்சல் ஏற்படும் என்பதால், 15 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.

கார்போக அரிசியை பயன்படுத்தி தோல் வியாதிகளுக்கான தேனீர் தயாரிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் கால் ஸ்பூன் கார்போக அரிசி பவுடர், அரை கிராம் கருஞ்சீரகம், கால் ஸ்பூன் காட்டுச்சீரகம்,

அரை ஸ்பூன் கசகசா ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்கவும். இதை வடிக்கடி குடிப்பதன் மூலம் தோல் வியாதிகள் குணமாகும். வயிற்று பூச்சிகள் வெளியேறும், குடலில் தேவையில்லாத அழுக்கை வெளியேற்றும், உள் உறுப்புகளை சுத்தமாக்கும். காம உணர்வை தூண்டக்கூடியது.

 130 total views,  3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *