கூந்தல் பராமரிப்பு கூந்தல் நன்கு வளர

தலைமுடி பராமரிப்பு பிரச்சினைகள் மற்றும் தடுக்க தீர்வுகள்!!!

அழகு குறிப்புகள்

கூந்தல் பராமரிப்பு  பிரச்சினைகள் தடுக்க  தீர்வுகள் தலைமுடியைச் சுத்தமாக வைத்திருக்க

சீயக்காய் 1 கிலோ, பஞ்சு கடுக்காய் 100 கிராம், வெந்தயம் கால் கிலோ, பச்சை பயறு கால் கிலோ, உலர்ந்த செம்பருத்தி 100 கிராம் … இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த தூளை ஆயில் பாத் எடுக்கும் போதெல்லாம் தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் கொஞ்ச நாளிலேயே பொடுகு, அரிப்பு, செதில், பேன் உள்பட சகலத்தொல்லைகளும் போய்விடும்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாக இருக்கும். இதனால், பேன், பொடுகு அண்டாது

ஒரு கப் கறிவேப்பிலை, ஒரு கப் நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை இளம் சூடான தலையில் தேய்த்து சீயக்காய்ப் போட்டு அலசிவர இளநரை போய்விடும். கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து, மோரில் கரைத்துக் குடிப்பதாலும் இரும்புச் சத்து கிடைத்துவிடும். முடி உதிர்தல் மற்றும் இளநரைக்கும் தீர்வு கிடைக்கும்.

கடலைப்பருப்பு – 500 கிராம், பூலாங்கிழங்கு – 100 கிராம்,

வெட்டிவேர் – 25 கிராம், வெந்தயம் -50 கிராம்

இவற்றை நன்கு அரைத்துக், சலித்து கொள்ளுங்கள். இந்தத்தூளில் இரண்டு மூன்று டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சூடான நல்ல தண்ணீரில் கரைத்து தலைமுடியை நன்கு அலசவும் . இது, வேர்க்கால்களில் உள்ள அழுக்கு, எண்ணைப்பசையை அகற்றி தலையை நன்கு சுத்தம் செய்வதோடு, வியர்வை நாற்றத்தையும் போக்கி நல்ல வாசனையைக் கொடுக்கும்.

கடுக்காய் -200 கிராம் வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இதனுடன் 20 கிராம் சுருள்பட்டை, 100 கிராம் வெட்டி வேரையும், கால் கிலோ தேங்காய் எண்ணையுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

தினந்தோறும் கூந்தலுக்கு இந்தத் தைலத்தை கூந்தலுக்கு தடவி வந்தால்,

கூந்தல் நீளமாக வளரத் தொடங்கும்.

முடி உதிர்வதை தடுக்க …

அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை இலைகளை தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கி ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்து விடும். தெளிந்த எண்ணையைத் தனியாக பிரித்து சேமியுங்கள். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் கூந்தல் உதிர்வது நின்று விடும்.

 148 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *