ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்

nattu maruthuvam

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள் https://bit.ly/3cSaaMS

ஓமம் கார்ப்பு சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஓமம் வாயுவை அகற்றும் பசியை தூண்டும், வெப்பம் உண்டாகும். மேலும் உடலை பலமாக்கும் உமிழ்நீரைப் பெருக்கும்.   

ஓமம் 100 கிராம் எடுத்துக் கொண்டு அதனை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அருந்தி வந்தால் வயிறு பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவை தீரும். 

ஓமம் 25 கிராம் மிளகு 25 கிராம் எடுத்துக்கொண்டு அதனை இடித்து பொடியாக்கி அதனுடன் 25 கிராம் பனை வெல்லம் சேர்த்து காலை மாலை என இருவேளைகளும் 10 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால்  வயிறு பொருமல் கழிச்சல் வயிற்றுக் கடுப்பு முதலியவைகள் குணமாகும்.

 புகைச்சல் மற்றும் இருமல் நீங்க மருத்துவ குறிப்பு

 ஓமம் 10 கிராம் கடுக்காய் தூள் 10 கிராம் முக்கடுகு 10 கிராம் சித்தரத்தை 10 கிராம்  அக்கிரகாரம் 10 கிராம்  திப்பிலி 10 கிராம் இவைகளை சுத்தம் செய்து பொடியாக்கி அதனுடன்  25 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என இருவேளைகளும் சாப்பிட்டு வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் தீரும்.

5 கிராம் ஓமத்தை லேசாக வறுத்து இடித்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை நன்றாக கலந்து துணியில் பந்து போல் கட்டி மூக்கால் நுகர மூக்கடைப்பு சளி ஒழுகுதல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.

 உணவு எளிதில் ஜீரணம்  ஆகவும், வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கவும் பசியை தூண்டவும் ஓமத்தை கஷாயமாக்கி குடித்துவர நல்ல பலனைத் தரும்.

 50 கிராம் நீரில் கொதிக்கவைத்து அத்துடன் 50 கிராம் பனை வெல்லம் சேர்த்து காலை வேளைகளில் குடித்துவர உடல் பலம் பெறும்.

சிறிதளவு ஒமம் திணை தண்ணீர் விட்டு மைய அரைத்து வயிற்றின் மீது பற்றுப்போட வயிற்றுவலி குணமாகும்.

இவ்வாறான குணங்களை கொண்டஓமத்தை உணவில் சேர்த்துக் கொண்டு வர வயிறு உப்புசம் அஜீரணம் சீதபேதி போன்றவைகளில் இருந்து  நிவாரணம் பெறலாம்

 271 total views,  3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *