முகம் பளபளக்க சில அழகு குறிப்புகள் !!!!!

முகம் பளபளக்க சில அழகு குறிப்புகள் !!!!!

அழகு குறிப்புகள்

முகம் பளபளக்க சில அழகு குறிப்புகள் !!!!!   https://bit.ly/3aQL7sg கற்றாலையில் உள்ள ஜெல்லை இரண்டு மூன்று முறை சுத்தம் செய்து அதன் ஜெல்லை முகத்தில் பூசி மசாஜ் செய்து வர முகம் வெண்மையாகவும் மென்மையாகவும்  இருக்கும்.

 இரண்டு கேரட்டை மிக்ஸியில் அரைத்து அந்த சாற்றுடன் காய்ச்சாத பசும் பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் மென்மையாக பளிச்சென்று இருக்கும்.

 இரவில் தினமும்  தூங்கப் போகும் முன் கடலை மாவுடன் நீர் சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாக மாறும்.

 நாட்டுத் தக்காளி இரண்டு எடுத்து அதனை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து அந்த சாற்றுடன் பாசிப்பயிறு மாவு சேர்த்து கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாக இருக்கும்.

முகம் பளபளக்க சில அழகு குறிப்புகள் !!!!!  முல்தானி மட்டியுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும்.

 மஞ்சள் பவுடருடன் தக்காளி சாறு கலந்து முகத்தில் பூசி வர முகம் பளிச்சென மாறும்.

உருளைக்கிழங்கின் தோல் சீவி அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து உடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர முகம் பொலிவாக இருக்கும்.

பயத்தம் பருப்பு பொடி செய்து நெல்லிக்காய் தூள் கலந்து தினசரி குளிக்க பயன்படுத்த பருக்கள் மறைந்து விடும்.

 ஜாதிக்காய் சந்தனம் மிளகு ஆகிய மூன்றையும் அரைத்து பற்று போட பருக்கள் மறைந்துவிடும்.

 பெண்கள் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலான் கிழங்கு மஞ்சள் ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாக மாறும்.

 கோரைக்கிழங்கு பூலான் கிழங்கு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை அரைத்து வைத்த பருப்பு மாவுடன் கலந்து தினமும் உடலில் பூசி குளித்து வர சருமத்தில் அழகு சேர்க்கும்.

ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறி பொலிவு பெறும்

 240 total views,  3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *