கூந்தல் பராமரிப்பு கூந்தல் நன்கு வளர

முடி நீளமாக வளர முடி உதிர்வதைத் தடுக்க சிறு குறிப்புகள் !!!!

அழகு குறிப்புகள்

முடி  நீளமாக வளர முடி உதிர்வதைத் தடுக்க சிறு குறிப்புகள் !!!!

சீதாப்பழ விதையை பொடி செய்து கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வர  முடி உதிர்வது குறையும்.

நெல்லிக்காய், செம்பருத்திப் பூ, ஆவாரம் பூ, வெந்தயம் ஆகியவற்றை அரைத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி வாரம் ஒரு முறை  தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வர உடல் வெப்பம் குறைந்து முடி நீளமாக வளரும்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

கறிவேப்பிலையை நன்றாக அரைத்து தயிருடன் சேர்த்து 48 நாட்கள்  தொடர்ந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர முடி நன்றாக வளரும்.

முடி  நீளமாக வளர முடி உதிர்வதைத் தடுக்க சிறு குறிப்புகள் !!சிறிய வெங்காயத்தை மையாக அரைத்து  தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும்.பொடுகும் நீங்கும்.

முடி  நீளமாக வளர முடி உதிர்வதைத் தடுக்க சிறு குறிப்புகள்!!! கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

தேங்காய் எண்ணெயில் கேரட், எலுமிச்ச பழச்சாறு கலந்து காய்ச்சி தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வர முடி நன்றாக வளரும்.

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு தலை அலசினால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.

ஓரிதழ் தாமரைவேர், சீந்தில் கொடியின் இலை, வேர், தண்டு, ஆலம் விழுதின் நுனிப்பாகம் ஆகியவற்றை தனி தனியாக அரைத்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு 200 கிராம் நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து அதை ஒரு வாரம் வெயிலில் வைத்து பின்பு பதமாய் காய்ச்சி தினந்தோறும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வளர தலைமுடி நீண்டு வளரும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது விரைவில் நிற்கும்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வர முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வாரம் ஒரு முறையாவது  முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வர, எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

நெல்லிக்காய்களை இரவில் தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

தலை முடி உதிர்வதை தடுக்க எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தேய்த்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

 150 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *