கொண்டைக்கடலையின் மருத்துவப்பயன்கள்

கொண்டைக்கடலையின் மருத்துவப்பயன்கள்!!!

nattu maruthuvam உணவு நலம் வாழ்வு நலம் சிறுதானிய பயன்கள் நாட்டு மருத்துவம்

கொண்டைக்கடலையின் மருத்துவப்பயன்கள்!!! கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று  சிவப்பு  கொண்டைக்கடலை. இது அளவில் சற்றுச் சிறியது, உறுதியானது. பொதுவாகச் சுண்டலாகவும் குழம்பில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படும் கொண்டைக்கடலை, நாடு முழுவதும் முக்கிய இடம்பிடித்திருக்கிறது சிவப்பு கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா.

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

கறுப்பு கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும்.

கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம்.  மேலும், எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட சிவப்பு கொண்டைக்கடலை இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு. குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.

கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான பிரச்சனைகள் அகலும். முக்கியமாக மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கொண்டக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் சிவப்பு  நிற கொண்டக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது.

இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.

இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் கொண்டைக்கடலை எனலாம். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தான் காரணம்.

கொண்டைக்கடலையை தொடர்ந்து எடுத்து வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

தினமும் இரவில் படுக்கும் போது  கொண்டக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், அதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

 44 total views,  3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *