கேழ்வரகு - சிறு தானியத்தின் நன்மைகள்

கேழ்வரகு – சிறு தானியத்தின் நன்மைகள்

nattu maruthuvam உணவு நலம் வாழ்வு நலம் சிறுதானிய பயன்கள் நாட்டு மருத்துவம்

எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது.
உடற்பருமன் குறைய உதவுகிறது. மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.
கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
புற்றுநோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும்: கேழ்வரகில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் செல்களை தாக்கக் கூடிய கிருமிகளை கட்டுப்படுத்தும். முகம் விரைவில் முதுமைத் தோற்றத்தை அடைவதையும் கட்டுப்படுத்தும். செல்களை புத்துயிருடன் வைத்துக் கொள்ள உதவும்.
கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பின், தானியத்தை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பஞ்சுத் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, கூழ் செய்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், ராகியின் பயனை அடையலாம்.
கேழ்வரகு கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றது. கேழ்வரகு மாவில் கூழ் செய்வது மிகவும் எளிது. முதலில் அரிசி நொய் அல்லது சிறுதானிய அரிசியை முதலில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த அரிசியில் கேழ்வரகு மாவை நீர்க்கக் கரைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடிப்பிடிக்க விடாது கிண்டும் போது கூழ் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி விடும். இப்படி முதல்நாள் இரவே கிண்டி வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த கூழில் சிறுது தண்ணீர், உப்பு, தயிர் போட்டு நன்கு கரைத்து, பொடி நறுக்கிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து குடிக்கலாம். இந்த கூழை கரைக்காமல், காய்கறி பயிர் வகைகள் போட்ட குழம்பு, மீன்கறி குழம்பு போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.
கேழ்வரகை கூழாக மட்டுமின்றி தோசையாகவும், அடையாகவும், சப்பாத்தியாகவும் (சிறிது கோதுமை மாவுடன் சேர்த்து), இடியாப்பமாகவும் செய்தும் சாப்பிடலாம். கேழ்வரகுவில் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) அதிகளவில் இருக்கிறது. 100 கிராம் கேழ்வரகுவில் 344 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. இதனால் எலும்புகளுக்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு கேழ்வரகு. கேழ்வரகு கூழை புளிக்க வைக்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வெறும் கேழ்வரகு மாவை கஞ்சியாக செய்து கொடுப்பதே பிறந்த குழந்தைகளுக்கான முதல் உணவாக இருக்கிறது.
மற்ற தானியங்களை விட கேழ்வரகுவில் அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இதன் தோலில் பால்ஃபெனால்ஸ் இருப்பதால் இது நீரிழிவு உள்ளவர்களுக்கும் நல்லது. மேலும் இதில் இயற்கையான விட்டமின் டி, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. முளை கட்டிய ராகியும், புளித்த ராகியும் உடல் இந்த சத்துக்களை சுலபமாக கிரகித்துக் கொள்ள உதவுகிறது. கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமே.

amazon link to purchase : https://www.amazon.in/dp/B08B7P9TQ6?ref=myi_title_dp

 175 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *