கற்றாழையின் இயற்கை மருத்துவக் குணங்கள்

கற்றாழையின் இயற்கை மருத்துவக் குணங்கள்!!!

nattu maruthuvam அழகு குறிப்புகள் நாட்டு மருத்துவம்

கற்றாழையின் இயற்கை மருத்துவக் குணங்கள்!!! காயகற்ப மூலிகை என்று போற்றப்படும் சோற்றுக் கற்றாழை, முன்னோர்கள் சோற்றுக் கற்றாழையின் ஆற்றலை பூரணமாக உணர்ந்து, அவற்றை காய கற்பமாகப் பயன்படுத்தி, வியாதிகள் அணுகா உடல் வலிமைப் பெற்றனர் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.

எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக் கூடியது. சோற்றுக் கற்றாழையை அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே, சிறப்பான முறையாகும்.

தொடர்ந்து சாப்பிட்டுவர, உடலில் இரத்தத்தில் கலந்திருந்த நச்சுக்கள் வெளியேறும், உடல் உள் உறுப்புகளின் சூடு குறையும், உடலின் சோர்வு விலகும்.
கற்றாழை ஆனது மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும் .

இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன .

சோற்றுக் கற்றாழை மடல்களின் தோலை நீக்கி, அதன் சதைப் பகுதியை சேகரித்து ஆறேழு முறை அலசிவர, அதன், வீச்சம் நீங்கும். அதனை காலநிலைக்கேற்ப, கோடைக்காலமெனில் வெறுமனே நெல்லிக்காயளவு சாப்பிடலாம், குளிர்காலங்கள் எனில், அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

முகத்தில் உள்ள நச்சுப் பருக்கள் மற்றும் உடல் காயங்கள் ஆறி மறையும், மலச்சிக்கல் நீங்கும், உடலின் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து உடல் வளமாகும்.

உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்கும், செரிமானக் கோளாறுகள் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் விலகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, உடலில் புதிய இரத்த செல்களை அதிகரித்து உடல் முதுமையைத் தடுத்து, இளமையை காக்கும் இயல்புடையது.

நீடித்த மலச்சிக்கலை போக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும், வயிற்றின் சூட்டை தடுக்கவும், தீராத வயிற்று புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது.

விளக்கெண்ணையுடன் சோற்றுக்கற்றாழையை காய்ச்சி, சிறிதளவு இருவேளை சாப்பிட்டு வர, வயிற்றுப் புண், வயிறு வீக்கம் மற்றும் சில பெரியவர்களுக்கு உள்ள நெடு நாள் மலச்சிக்கல் நீங்கும், உடலின் சூடு குறைந்து, உடல் வனப்புடன் திகழும். உணவில் புளி, காரம் நீக்கி இதையே தினமும் சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி மட்டுப்படும்.

பல பருவங்கள் வாழக்கூடியது, சதைப்பற்றுள்ள நீர்ச்சத்து மிக்க குறுச்செடி, இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.

இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.
தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி , முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது .

முகத்துக்கு பூசும் கிரீம்கள், நகத்துக்கு பூசும் நகப்பூச்சு போன்றன இந்த கற்றாழையில் இருந்து தான் பெறப்படுகிறது.

அலசி எடுக்கப்பட்ட சோற்றுக் கற்றாழையுடன் பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம், நெய்யுடன் சேர்த்து உண்டுவர, நாள்பட்ட வறட்டு இருமல் தீர்ந்துவிடும்.

சோற்றுக் கற்றாழை சதைகளை நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் பெண்கள் சாப்பிட்டு வர, மாத விலக்கு இன்னல்கள் தீரும்.

நன்கு அலசி சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை சதைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கடுக்காய்ப் பொடி சிறிதளவு இட, சோற்றுக் கற்றாழை சதையிலிருந்து நீர் தனியே விலகும், அதை சேகரித்து அத்துடன் ஏழெட்டு துளிகள் எலுமிச்சை சாறு இட்டு, தினமும் காலைவேளையில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

இதன்மூலம், உடலில் அதிகமுள்ள வாயு [வாதம்], பித்தம் [சூடு], மற்றும் நீர் [கபம்] நீங்கி, உடல் புத்துணர்வு பெறுவதை உணரலாம். இதை மூன்று நாட்கள் சாப்பிடலாம்.

சோற்றுக் கற்றாழை, மஞ்சள் இவற்றை நன்கு அரைத்து, வெயில் பட்டு கறுத்துப்போன, உடலின் கைகால் மூட்டுகள், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தடவி சிறிதுநேரம் கழித்து, நன்கு தேய்த்து குளித்துவர, தோல் நோய்கள் விலகி, வெயிலில் பட்ட கருமைகள் நீங்கி, உடல் வனப்பாகும்.

சோற்றுக்கற்றாழை வேர்களை சுத்தம் செய்து, ஆவியில் வேகவைத்து, பின் வெயிலில் உலர்த்தி, பொடியாக்கி, பாலில் பனங்கற்கண்டு சேர்த்து இரவில் சாப்பிட்டுவர உடல் வளமாகி தாம்பத்தியம் மேம்படும்.

 73 total views,  3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *