கூந்தல் பராமரிப்பு கூந்தல் நன்கு வளர

கூந்தல் பராமரிப்பு கூந்தல் நன்கு வளர

அழகு குறிப்புகள்

கூந்தல் பராமரிப்பு கூந்தல் நன்கு வளர ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறிது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம் .

கறிவேபபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம் .

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.

பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.

சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபபிலை ,பாசிப்பருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச  பளபளக்கும் உங்கள் கூந்தல் சுத்தமாகி விடும்.

ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம் .தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .

 86 total views,  4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *