வெட்டிவேர் மூலிகை
மருத்துவ குணங்கள்

வெட்டிவேர் மூலிகையின் சிறந்த மருத்துவ குணங்கள்

வெட்டிவேர் மூலிகையின் சிறந்த மருத்துவ குணங்கள்

வெட்டிவேர் என்பது பழமையான மூலிகையாகும் இது புல் இனத்தை சேர்ந்தது வெட்டிவேர் பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும் ஆற்றுப் படுகையிலும் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது.

வெட்டிவேர் நான்கு முதல் ஐந்து அடி வரை உயரும் தன்மைகொண்டது வேர் கொத்துக்கொத்தாக இருக்கும் இந்த வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை புதிதாக நட்டு பயிரிடுவதால் இது வெட்டி வேர் என வழங்கப்படுகிறது.

வெட்டிவேர் அதிக வாசம் உடைய மூலிகையாகும் மருத்துவத்தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கின்றது. வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும் உற்சாகத்தையும் தரக்கூடியது.

கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும் மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகின்றது வெட்டிவேர் தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நோயாளிகள் பயன் அளிக்கக் கூடியது வெப்பம் தணிக்க பயன்படுகிறது வெட்டிவேர் உடலின் வேர்வையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடல் சீராக செயல்பட உதவுகிறது.

வெட்டிவேர் நல்ல நறுமணத்தை கொடுப்பதுடன் குளிர்ச்சியை தரக்கூடியது. தயார் செய்யப்படும் விசிறி வீசி வர உடல் எரிச்சல் நாவறட்சி தாகம் போன்றவற்றை நீக்குவதுடன் மனம் மகிழ்ச்சியடைகிறது.

கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு ஜன்னல்களில் கட்டிகளாக கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மனத்தையும் குளிர்ச்சியையும் தருகின்றது.

இரண்டு பிடி வெட்டிவேரை ஒரு மண்பாண்டத்தில் நன்கு காய்ச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையுடன் கலந்து அந்த நீரை வெயில் காலங்களில் குடித்துவர உடல் சூட்டினால் ஏற்படும் எரிச்சல் கழுத்துவலி கோடை கொப்புளங்கள் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.

வெட்டிவேரை நீரில் கொதிக்கவைத்து பருக காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வு நீங்கும் இந்த நீரை பருகுவதால் ஜீரணசக்தி அதிகரிப்பதுடன் வயிற்றுப்புண்ணும் முகத்தில் ஏற்படும் பருக்கள் மறையும்.
வெட்டி வேரில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கை கால் பிடிப்பு களுக்கு தடவி வர நல்ல குணம் ஆகும்.
வெட்டி வேரில் ஊறிய தண்ணீரை குடித்து வர காய்ச்சல் நீர் உடல் தோல் மற்றும் மன அழுத்தம் போன்றவை குறையும்.

முகத்தில் உள்ள பருக்கள் மறைவதற்கு வெட்டிவேரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றுடன் முதல்நாள் இரவில் வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து அந்த விழுதை பருக்கள் மீது தடவி வர பருக்கள் மறைந்துவிடும்.

for purchase வெட்டிவேர் மூலிகை click in : https://amzn.to/2AgBByY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *