பெண்களின் அழகு சேர்க்க வழிமுறைகள்
மருத்துவ குணங்கள்

பெண்களின் அழகு சேர்க்க வழிமுறைகள்

பெண்களின் அழகு சேர்க்க வழிமுறைகள்

பெண்களின் இளநரையை போக்க சீயக்காய் கொட்டை எடுத்த நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து மாதம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும் இவ்வாறு குளிப்பதால் முடி உதிர்வதும் கட்டுப்படும்.

பெண்கள் தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நம்மை தரும் தலையில் தேங்காய் எண்ணையை தேய்த்து நன்றாக மசாஜ் செய்தால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும்.


கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் சந்தனக் கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.
வேப்பங்கொழுந்து விரலி போன்ற மைய அரைத்து இரவில் முகத்தில் இருக்கும் ரோமங்களின் மீது தடவிவர ரோமங்கள் உதிரும்.
பருக்கள் மறைவதற்கு துத்தி இலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர பருக்கள் மறைந்துவிடும்.
வெட்டி வேர் 100 கிராம் சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர் விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவி வர முகபருக்கள் வேனல் கட்டிகள் மறையும்.
பயத்தம் பருப்பு பொடி செய்து நெல்லிக்காய் தூள் கலந்து தினசரி குளிக்க பயன்படுத்த பருக்கள் மறைந்து விடும்.
ஜாதிக்காய் சந்தனம் மிளகு ஆகிய மூன்றையும் அரைத்து பற்று போட பருக்கள் மறைந்துவிடும்.
பெண்கள் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலான் கிழங்கு மஞ்சள் ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாக மாறும்.
கோரைக்கிழங்கு பூலான் கிழங்கு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை அரைத்து வைத்த பருப்பு மாவுடன் கலந்து தினமும் உடலில் பூசி குளித்து வர சருமத்தில் அழகு சேர்க்கும்.
முகப்பரு தழும்பு மாற புதினாசாறு 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் பயித்தம் பருப்பு மாவு ஒரு ஸ்பூன் கலந்து முகப்பரு தழும்பு போட்டுவர தழும்பு மாறும்.
ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறி பொலிவு பெறும்
கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் பெண்களின் முகம் ஜொலிக்கும்.
தலை முடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *