அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்
மருத்துவ குணங்கள்

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது அத்திப்பழம். அத்திமரம் 8 மீட்டர் வரை உயரமாக வளரும் தன்மை கொண்டது அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்தப்படுகிறது பழம் கொத்தாக செடியின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காய்க்கும்.

அத்திப்பழத்தில் புரத சத்து சுண்ணாம்பு சத்து இரும்பு சத்து வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளது.

அத்தி காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது
உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம்.

உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பை தரக்கூடியது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி ஈரல் மற்றும் நுரையீரலிலுள்ள தடுப்புகளை நீக்குகிறது. அத்திப்பழம் சாப்பிடுவதால் வாய்நாற்றம் நீங்குகிறது.

அத்திப்பழம் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும் சர்க்கரை நோய் சர்க்கரைப் புண் உடல் வீக்கம் கட்டிகள் சொரி சிரங்கு நமைச்சல் நீர்க்கட்டிகள் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் அத்திபழம் சாப்பிட சிறந்த பலனளிக்கும்.

சிறுநீர் கற்களைக் கரைக்கவும் மண்ணீரல் கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப்பழம் ஜீரணத்தை எளிதாக்கி மூல நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதில் இருந்து கிடைக்கும் பாலினை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.

பனிக்காலங்களில் அத்திப்பழத்தினை சர்க்கரையுடன் கலந்து இரவில் பணியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட உடம்பிலுள்ள வெப்பத் தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படுகிறது.

இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பின் சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிட நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும் மேலும் இரவில் 5 பழங்களை சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

உலர வைத்து பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகின்றன இரவில் ஊறவைத்து காலையில் குடித்தால் வாத நோய் மூட்டு வலிகள் குணமாகும் மேலும் அறிய புண்களை கழுவ பயன்படுத்தலாம்.

அத்திப் பழத்தை சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும் அதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சோகை நோய் ஏற்படாது ரத்த உற்பத்தி அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்
தலைமுடியும் நீளமாக வளர்கிறது

அத்திப்பழம் https://amzn.to/2UNdVeE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *