மிளகு
மருத்துவ குணங்கள்

மிளகு மருத்துவ பயன்கள்

மிளகு மருத்துவ பயன்கள் மிளகு கொடிவகையைச் சார்ந்தது இலை வேர் முதலியன மருத்துவ குணங்கள் கொண்டவை மிளகில் காரம் அதிகம் உடையது மிளகின் காரத்தன்மை உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்களான ஜுரம் மலேரியா போன்றவற்றை தடுக்கும் குணம் கொண்டது.
அஜீரணம் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டவை மிளகு மனச்சோர்வையும் களைப்பையும் போக்கும் குணம் கொண்டவை மூளையின் அதிக செயல்பாட்டையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது மிளகு உடலில் உள்ள வியர்வை அதிகரித்து உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை மிளகுக்கு உள்ளது

மிளகுத்தூள், வெங்காயம், உப்பு சேர்த்து தலையில் தேய்த்து குளித்துவர முடி வளரும், முடி உதிர்வதை தடுக்கப்படும்.

ஜாதிக்காய் சந்தனம் மிளகு போன்றவற்றை அரைத்து பருக்களின் மீது தடவி வர பருக்கள் மறையும் உப்புத்தூள் சேர்த்து பல் துலக்கினால் இருவழி ரத்தம் வடிதல் வாய் துர்நாற்றம் போன்ற போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப விலகு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது மிளகு ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து பொடி செய்து தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் சாப்பிட்டு வர சளி ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

பத்து மிளகினை தண்ணீர் சேர்த்து இடித்து கொதிக்க வைத்து குடித்து வர விஷக்கடிகள் முறியும்.

மிளகு உடன் சிறிது உப்புச் சேர்த்து பொடி செய்து சூடான நெய்யுடன் சேர்த்து சாப்பிட வயிறு உப்புசம் பசியின்மை போன்றவை குணமாகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும் மிளகை சுட்டு அதன் புகையை சுவாசிக்க தலை வலி தீர்ந்து சளியும் குணமாகும்.

மிளகுத் தூளுடன் பனங்கல்கண்டு அல்லது தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும் இலையுடன் 5 மிளகு மிளகு எடுத்து 200 எம்எல் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்து வர நெஞ்சு சளி நீங்கும் தினமும் ஐந்தாறு மிளகினை மென்று சாப்பிட்டுவர ஆஸ்துமாவால் அவதிப்படுவர்கள் குணமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *