சித்தரத்தை!!! சித்த மருத்துவ பயன்கள்
மருத்துவ குணங்கள்

சித்தரத்தை!!!! சித்த மருத்துவ பயன்கள்

சித்தரத்தை!!! சித்த மருத்துவ பயன்கள்
சித்தரத்தை ஒரு செடி வகையை சார்ந்தது. சித்தரத்தை சித்தரத்தை பேரரத்தை என இரு பிரிவுகள் உள்ளன. சித்தரத்தை செடியின் வேர் மருத்துவ குணம் கொண்டது. மஞ்சள், இஞ்சியைப் போன்று சித்திரத்தையும் கிழங்கு வகை சார்ந்தது,

கார சுவையும் தன்மையும் கொண்டன, இது முடக்குவாதம் சிறுவர்களுக்கான சுவாச நோய்கள் வாத நோய்கள் குடல் சம்பந்தமான நோய்கள், குடல் வாய் தொண்டை சம்பந்தமான நோய்கள் கட்டுப்படுத்த உதவுகின்றன.

சிறந்த கிருமி நாசினியாகவும் குடல் புழுக்களை வெளியேற்றுவதற்கும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது,

செரிமான ஊக்கியாகவும் சிறந்த மனம் தருவதாகும் தருவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு துண்டு சித்தரத்தை வாயில் போட்டு சுவைக்க வாய் நாற்றம் மறையும்
கபம் வாதம் வீக்கம் இழுப்பு இருமல் காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது மேலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றும் திறன் கொண்டது. கபத்தை அகற்றும் குணம் கொண்டது

நுரையீரல் குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் குழாய் மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்ற பயன்படுகிறது.
சித்தரத்தை தூளாக்கி சம அளவு பனங்கற்கண்டை ஒன்றாக கலந்து ஒரு ஸ்பூன் தினமும் பாலில் கலந்து குடித்து வர சுரம் மற்றும் சுவாசப் பாதிப்புகள் விலகும்.

சித்தரத்தை துண்டுகளை மூன்று டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு பங்காக சுண்டி வரும் பொழுது அதனை எடுத்துக் கொண்டு தினமும் காலை மாலை தொடர்ந்து பருகி வர வறட்டு இருமலை குறைக்கும்.
சித்தரத்தை அமுக்கிரா கிழங்கு போன்றவற்றை தூளாக்கி சிறிது அளவு தேனில் குழைத்து காலை மாலை என 48 நாட்கள் சாப்பிட்டு வர எலும்புகள் பலம் பெற்று எலும்புகளில் உள்ள பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றலும் மேம்படும்.
சித்தரத்தை அதிமதுரம் தாளிசப்பத்திரி மற்றும் மிளகு ஆகியவற்றை இலேசாக வறுத்து பொடியாக்கி தினமும் சிறிதளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர ஆஸ்துமா இரைப்பு இருமல் மூச்சடைப்பு போன்றவற்றை குணமாக்கும்.
சித்தரத்தை பொடி கால் டீஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து காலை மாலை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வர நுரையீரலில் உள்ள சளி இளக்கி வெளியேற்றி இருமலை போக்கும் குணம் கொண்டது.
சித்தரத்தை துண்டுடன் அமுக்கிரா கிழங்கை உலர்த்திப் பொடியாக்கி கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன்னர் 48 நாட்கள் சாப்பிட்டு வர சிறந்த வலி நிவாரணியாகவும், அலர்ஜியைப் போக்கவும் புற்றுநோயை குணப் படுத்துவதற்கும் பயனளிக்கக் கூடியது.
சித்தரத்தை, அதிமதுரம், தாளிசப்பத்திரி, திப்பிலி, இவற்றை சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அந்த பொடியினை குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் இரைப்பு இருமல் கொடுத்து வர அதனை குணப்படுத்தும் தன்மை கொண்டது மேலும் ஆஸ்துமாவினால் துன்பப்படுபவர்கள் இந்த பொடியினை கால் டீ ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து காலை உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.

for purchase help


சித்தரத்தை https://amzn.to/2ZPsDTl

திப்பிலி https://amzn.to/2ZNFREi

அதிமதுரம் https://amzn.to/2ZTnV7f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *