ஆவாரம் பூவின் மிகுந்த மருத்துவ குணங்கள்
மருத்துவ குணங்கள்

ஆவாரம் பூவின் மிகுந்த மருத்துவ குணங்கள்

ஆவாரம் பூவின் மிகுந்த மருத்துவ குணங்கள்

பெரும்பாலான தாவரங்கள் மனிதர்களின் உடலில் பாதிப்பு பாதிப்புகளைப் போக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அவற்றில் ஆவாரம்பூ தாவரங்களின் வேர் இலை, பூ, மரத்தின் பட்டை போன்றவை மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆவாரம் பூ பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
ஆவாரம் பூவுடன் பருப்பு வெங்காயம் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வர உடம்பில் பளபளப்பு கூடுதல் ஆகும்.
சிறிதளவு ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை வடிகட்டி குடித்து வர சிறுநீரைப் பெருக்கி உடல் துர்நாற்றத்தை போக்கும்.
ஆவாரம்பூ மற்றும் பூ கொழுந்து ஆவாரம் பட்டை வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி கொண்டு மெல்லிய துணியினால் சலித்து அந்த பொடியை பசுவின் நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்
ஆவாரம் பூ நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின் குளித்து வர உடலில் துர்நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.
ஆவாரம்பூ மற்றும் பட்டையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் போகும்.
ஆவாரம் பூ மற்றும் அதன் பட்டை பனங்கல்கண்டு வால் மிளகு ஏலக்காய் போன்றவற்றை தண்ணீர் விட்டு காய்ச்சி அதில் பால் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர உடம்பு வலுவடையும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு வரும்
ஆவாரம் பூ செம்பருத்தி பூ தேங்காய் பால் போன்றவற்றை தலா ஒரு கப் எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நீங்கி கூந்தல் நன்கு வளர தொடங்கும்.
காயவைத்த ஆவாரம் பூவை சுத்தமான நீரில் கொதிக்க வைத்து அந்நீரை வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வர நீரழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் மேலும் பனங்கல்கண்டு சேர்க்காமலும் இந்த நீரினை குடித்து வரலாம்.
ஆவாரம்பூ வெந்தயம் தலா 100 கிராம் பயத்தம்பருப்பு அரை கிலோ போன்ற கலந்து அரைத்து அந்த பவுடரை வெந்நீரில் கலந்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வர கூந்தல் கருகருவென வளரும்.
உடலில் நீர் சத்து வரண்டு நீர் வறட்சி ஏற்படும் நேரத்தில் ஆவாரம் பூ ஊறவைத்த தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடித்து வர உடலில் ஏற்படும் நீர் வறட்சி நீங்கும்.
ஆவாரம் பூவின் பசுந்தயிர் போட்டு அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வர முகம் அழகாக இருப்பதற்கு முகம் பொலிவு பெறும் மேலும் முகத்தில் உள்ள வடுக்கள் எண்ணைத் தன்மை போன்றவற்றை நீக்கி முகம் அழகாக மாறும்.
காய்ச்சல் ஏற்பட்ட நேரத்தில் ஆவாரம்பூ கலந்த தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடித்து வர உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் படிப்படியாக குறையும்.

ஆவாரம் பூவை பச்சையாக சாப்பிட்டு வர வயிற்றில் நிறைந்து இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி வயிற்று சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
ஆவாரம்பூ தேனி பருகி வருவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை நீங்கி கல்லீரல் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் குணம் கொண்டவை ஆவாரம் பூவை அரைத்து உடலில் ஏற்படும் புண்கள் மற்றும் காயங்கள் மீது தடவி வர புண்கள் காயங்கள் சீக்கிரம் குணமாகும்.
பக்குவப்படுத்திய ஆவாரம்பூ சாப்பிட்டு வர உடலில் புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கெட்டுப் போன உணவுகள் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புகளை ஆவாரம்பூ நீக்கும்.
ஆவாரம் பூ வைத்த பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டுவர சர்க்கரை நோயின் தாக்கம் படிப்படியாக குறையும்.
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சம அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணமாக செய்து காலை மாலை அரை தேக்கரண்டி அளவு பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த ஆவாரம்பூவினை நாமும் பயன்படுத்தி பலன் பெறுவோமாக

for purchase help
ஆவாரம் பூ https://amzn.to/2ZN98L6

பனங்கற்கண்டு https://amzn.to/2LjRPxB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *