பச்சை கற்பூரம்
மருத்துவ குணங்கள்

பச்சைக் கற்பூரத்தின் மருத்துவ குணங்கள்!!!

பச்சைக் கற்பூரத்தின் மருத்துவ குணங்கள்!!!

பச்சை கற்பூரம் நல்ல வாசனையை கொண்டது. வெள்ளை நிறத்தில் இருக்க கூடியது நாட்டு மருத்துவத்தில் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சைகற்பூரம் கட்டி வடிவிலும் எண்ணெய் வடிவிலும் கிடைக்கின்றது. பச்சைகற்பூரம் ஆங்கிலத்தில் Chamber என சொல்லப்படுகிறது. பெரும்பாலும் பச்சைகற்பூரம் இனிப்புகளில் சுவையூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பச்சைக் மருத்துவ பண்புகளாலேயே பச்சைக் கற்பூரம் பல்வேறு ஆரோக்கிய பொருட்களில் முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
சமையலிலும் முக்கிய பங்கு வைக்கிறது பலவகை இனிப்பு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
பச்சைகற்பூரம் உண்ணத்தக்க கற்பூரம் மற்றும் பூஜைக்கு பயன்படும் கற்பூரம் என்ன வகைப்படுகிறது. உண்ணத்தக்க கற்பூரத்தை சமையலுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். பச்சை கற்பூரத்தை பாறைகளின் மீது தடவினால் பாறைகளில் விரிசல் ஏற்படும்
பச்சை கற்பூரம் அதிக வாசனை குணத்தினை கொண்டது இந்த வாசனைக்கு பெரிய சக்தி உடையது.
பச்சைக்கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் குணம் கொண்டது மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்..
மூன்று நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபட வீட்டில் நிம்மதி அதிகரிக்கும்.
பச்சைக் கற்பூரத்தின் மகிமையினால் வீட்டில் துர்சக்தி வெளியேறும் வீண் செலவுகள் இருக்காது. பச்சைக் கற்பூரத்தை பணமிருக்கும் இடத்தில் வைத்தால் எதிர்மறையான வாசகங்களையும், சக்திகளையும் தடுத்து நிறுத்தும், பணப்புழக்கம் அதிகரிக்கும்.
பச்சைக் கற்பூரம் ஏலக்காய் சிறிதளவு சோம்பு ஆகியவற்றை சேர்த்து துணியில் கட்டி பணப்பெட்டியில் வைத்தால் பணம் பெருகும். பச்சை கற்பூரத்தை ஆரத்தி எடுத்து குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வணங்கி பிரார்த்தனை செய்ய நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல், கெட்ட சக்திகள், வீண் செலவு போன்றவற்றை விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமைய பச்சைக்கற்பூரம் சிறந்து விளங்கும்,.

மருத்துவ பயன்கள்

பச்சைக்கற்பூரம் சளியிலிருந்து நிவாரணம் பெறவும் நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்ற உதவும். பச்சை கற்பூரத்தை சூடான நீரில் கலந்து ஆவி பிடித்தால் நெஞ்சு சளி நெஞ்சு வலி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

சருமத்தில் உள்ள பருக்களை போக்க பெரிதும் பச்சைகற்பூரம் பயன்படுகிறது.
100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கலக்கி காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி இரவில் படுக்கும் முன் முகத்தை கழுவி இந்த எண்ணெய் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய பருக்கள் போக்குவதுடன் கருமையான தழும்புகள் ஏற்படாமலும் தடுக்கும் குணம் கொண்டவை.
பச்சை கற்பூரம் மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் அளித்து சுவாசத்தை சீர் செய்யும் குணம் கொண்டது.
பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்கு தடவி வர பேன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். குளிக்கும் நீரில் பச்சை கற்பூரம் கலந்து குளிப்பதினால் தலைவலி மற்றும் பேன் தொல்லைகள் இருந்து விடுபடலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் பச்சை கற்பூரத்தை சிறிதளவு போட்டு அந்த நீரில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைக்க கால் வெடிப்பு மற்றும் கால் வலி குறையும்.

பச்சை கற்பூரம் இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஒரு பாட்டில் 5 கிராம் பச்சை கற்பூரத்தை கலந்து வீடுகளில் தெளித்து வர பூச்சி மற்றும் கொசுக்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Amazon link: https://amzn.to/2Lm7Ul7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *