ஏலக்காயின் மூலிகை மருத்துவ பயன்கள்
மருத்துவ குணங்கள்

ஏலக்காயின் மூலிகை மருத்துவ பயன்கள்

ஏலக்காயின் மூலிகை மருத்துவ பயன்கள்
ஏலக்காயில் சுண்ணாம்பு சத்து புரதச் சத்து பாஸ்பரஸ் பொட்டாசியம் சோடியம் இரும்பு வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளது.
ஏலக்காய் பல வகைகளில் இயற்கை மருத்துவ பொருளாக பயன்படுகிறது மேலும் ஏலக்காய் பித்தம் மற்றும் நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தவும் தன்மை கொண்டவை.
இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருளாகவும் ஏலக்காய் விளங்குகிறது ஏலக்காய் ஒரு பொருளாக மட்டும் பயன்படாமல் மூலிகை பயன்பாட்டிற்கும் மேம்படுத்தப்படுகிறது.
ஏலக்காய் இரண்டு வகைகளில் கிடைக்கப்பெறுகிறது கருப்பு ஏலக்காய் மற்றும் பச்சை ஏலக்காய். பெரும்பாலும் பச்சை ஏலக்காய் தான் சமையலுக்கு மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காய் உடலில் தங்கியுள்ள கொழுப்பை குறைப்பதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
ஏலக்காய் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து ஜீரண சக்தியை பெரிதும் பயன் படுகிறது. ஏலக்காய் வாயு தொல்லை வாயுத்தொல்லை எதுக்களித்தல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
கருப்பு ஏலக்காய் பக்கவாதத்தை தடுக்க பயன்படுகிறது.
பசியின்மை பிரச்சனை மற்றும் புற்றுநோயை போக்குவதற்கு ஏலக்காய் சிறந்து விளங்குகிறது.
மன அழுத்தத்தினால் இருப்பவர்கள் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்து வந்தால் மன அழுத்தம் தீரும்.
பச்சை ஏலக்காய் சுவாசத்தை சரிப் படுத்துவதுடன், மூச்சுத்திணறல் இருமல் மூச்சு குறைவாக எழுத்துகள் ஆஸ்த்மா போன்றவற்றை தடுக்க பெரிதும் பயன்படுகிறது.
ஏலக்காயில் உள்ள மாங்கனீஸ் சத்து சர்க்கரை நோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.
நமது வாயில் உள்ள கெட்ட கிருமிகளை போக்குவதுடன் உமிழ்நீர் சுரப்பதற்கும் பல் இடுக்குகளில் படிந்த கறைகள் மற்றும் கிருமிகளை அகற்றி வாய் துர்நாற்றத்தை போக்கவும் பெரிதும் உதவுகிறது
ஏலக்காய் டீ குடித்துவர தொடர்ச்சியான விக்கல் ஏற்படும் பொழுது அதனை சரி செய்கிறது.
ஏலக்காய் பொடியுடன் மிளகு சேர்த்து சிறிது துளசி சாறு சேர்த்து குடித்துவர கடும் கபம் இளகி நலம் பெருகும். உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தோல் சுருக்கம் கோடுகள் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்க பெரிதும் உதவுகிறது.
ஒரு கிராம் ஏலக்காய் ஒரு கிராம் பட்டை 125 மில்லி கிராம் கருப்பு மிளகு ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை குடித்துவர சாப்பிட்டு வர தொண்டை புண்கள் சரியாகும்.
ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.
அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய்ய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.
ஏலக்காய் பொடியை 1 டீ ஸ்பூன் தேனுடன் சேர்த்து முகத்திற்கு தொடர்ந்து மாஸ்க் போட்டு வந்தால் சரும நிறமாற்றம், கரும்புள்ளிகள், தழும்பு மற்றும் பருக்கள் போன்றவைகளும் சரியாகுகிறது
ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினமும் இருவேளை பருகிவர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு வலிமை அடையும்.

amazon link: https://amzn.to/2LhD8Kc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *