சுக்கு மருத்துவ மூலிகை பயன்கள்
மருத்துவ குணங்கள்

சுக்கு மருத்துவ மூலிகை பயன்கள்

சுக்கு மூலிகை மருத்துவ பயன்கள்

இஞ்சியை பக்குவம் செய்த பின்னர் கிடைப்பது சுக்கு. இஞ்சியை அறுவடை செய்ததும் ஒருநாள் முழுவதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு இஞ்சியின் மேல் தோலை நீக்கிய பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்து பின்னர் கிடைப்பது சுக்கு ஆகும்.

சுக்கானது கார்ப்பு சுவையுடையது. மேலும் சுக்கானது பசியை உண்டாக்கி இருமலை குறைத்து கபத்தைக் குறைக்கும் குணம் கொண்டவை. ருசியை அதிகரிக்கவும், ஜீரணத்தை போக்கும் சளியை குணப்படுத்தவும் மூட்டுவலியை நீக்குவதற்கும் வாயுத்தொல்லை அகற்றுவதற்கும் அஜீரணத்தை போக்குவதற்கும், பயன்படுகிறது. ஆண்மையை அதிகரிக்கவும் தாய்ப்பாலை சுரக்க செய்யவும் சுக்கு சிறந்த பங்காற்றுகிறது.

சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடானதும் வலியுள்ள கை கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

சுக்கைப் பொடி செய்து சிறிதளவு எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடித்து வர பித்தம் தீரும். சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை அனைத்தையும் சேர்த்து கசாயம் செய்து குடித்துவர கடுஞ்சளி சீக்கிரம் குணமாகும்.

சிறிதளவு சுக்குடன் ஒரு வெற்றிலையை சேர்த்து மென்று சாப்பிட்டு வர வாயு தொல்லை குணமாகும்.

சுக்கு வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர ஆரம்பநிலை வாதம் சீக்கிரம் குணமாகும்.

மிளகு சீரகம் பூண்டு இவற்றுடன் சுக்கையும் சேர்த்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
வெந்தயத்துடன் சுக்கு சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர அலர்ஜி தொல்லை குணமாகும்.

துளசி இலையுடன் சுக்கு சேர்த்து மென்று சாப்பிட்டுவர தொடர் வாந்தி குமட்டல் நிற்கும்.

சுக்குடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள பூச்சிகள் அழியும்.

சுக்கு அதிமதுரம் இரண்டையும் பொடி செய்து தேனில் சேர்த்து சாப்பிட்டுவர இருமல் குணமாகும்.

சுக்கு ஐந்து மிளகு ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் தேள் பூரான் கடி விஷம் முறியும்.

சுக்கை தட்டி வெந்நீரில் கலந்து தலை குளிக்க நீர்க்கோர்வை தலைவலி நீங்கும்.

தயிர்சாதத்துடன் சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

சுக்கு மிளகு பூண்டு வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து தினமும் காலை மாலை இரவு என மூன்று நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் மறையும்.

சுக்கு மிளகு சீரகம் அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்துவர ஈர் பேன் ஒழியும்.

சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர ஈறுகள் பலம் பெறுவதுடன் பல் வலி, வாய் துர்நாற்றம் நீங்கும்.

amazon link: https://amzn.to/2NGbx7Z

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *