சரும பராமரிப்பு
மருத்துவ குணங்கள்

முகம் மற்றும் சரும பராமரிப்புக்கு இயற்கை மருத்துவ குறிப்புகள்

முகம் மற்றும் சரும பராமரிப்புக்கு இயற்கை மருத்துவ குறிப்புகள்

வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள் வைட்டமின் விட்டமின் சத்து நிறைந்த கேரட் பால் கலந்து அரைத்து முகம் மற்றும் சருமத்தில் பூசிவர முகமும் சருமமும் பளபளப்பாகும்.

வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர் பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

கடலைமாவுடன் சிறிது எலுமிச்சை சாறு மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் பெண்களின் முகம் பிரகாசமாக இருக்கும்.

வெள்ளரிக்காய் சாற்றுடன் மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சாற்றினை எடுத்து காட்டன் துணியை பயன்படுத்தி கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து போகும்.

ஆரஞ்சு தோலை நன்றாக காயவைத்து பொடியாக்கி அதில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பேஸ்டாக தயார் செய்து முகத்தின் மேல் பேஸ் பூசி ஊற வைத்து அழுத்தி தேய்த்து கழுவ கரும்புள்ளிகள் மறையும்.

ஐந்து சரி பழங்களுடன் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

இரண்டு சிறிய வெங்காயத்தை பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் அரை ஸ்பூன் கடலைமாவு அரை ஸ்பூன் சந்தனப் பொடி ஒரு ஸ்பூன் தயிர் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சில சொட்டுக்கள் பால் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.

தக்காளி பழ சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து முகம் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.

போதையினால் ஏற்படும் வேர்க்குரு மறைய வேப்பிலை மஞ்சள் மற்றும் சந்தனத்தை அரைத்து பூசினால் வேர்க்குரு மறையும்.

சூரிய ஒளியினால் கருத்த நிறம் மாற இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் தயிருடன் இரண்டு ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சேர்த்து மைய அரைத்து முகம்,சருமம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருத்த நிறம் மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *