அதிமதுரம் மூலிகை சிறந்த மருத்துவ குணங்கள்
மருத்துவ குணங்கள்

அதிமதுரம் மூலிகை சிறந்த மருத்துவ குணங்கள்

அதிமதுரம் மூலிகை சிறந்த மருத்துவ குணங்கள்
அதிமதுரம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பொருளாகும். பல மருத்துவ குணங்களை கொண்டது.
அதிமதுரம் செடி ஒன்றரை மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது.
நட்ட 3 முதல் 5 வருடங்கள் விட்டு அறுவடை செய்யலாம். அதன் வேர் கிழங்குகளும் பரவலாக முழுமையாக வளர்ந்து இருக்கும்.
அதிமதுர மரத்தின் வேர், தண்டு, கிழங்கு, ஆகியன மருத்துவ குணங்கள் கொண்டவை.
அதிமதுரம் வேர் சர்க்கரையை விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. நல்ல வாசனையாகவும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.
அதிமதுரம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் தன்மை கொண்டவை. அதிமதுரம் தொண்டை கரகரப்பு மற்றும் வறட்டு இருமல் களைப் போக்கி நுரையீரலை வலுப்படுத்தும் தன்மை கொண்டது.

ஜலதோஷம் ஆஸ்துமா போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
அதிமதுரத் துண்டை வாயில் அடக்கிக் கொள்ள வாயில் உமிழ் நீர் சுரக்கும் இதை விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும் குரல் கம்மல் நீங்கி தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்துவிடும்.

அதிமதுரம் அதனுடன் பணங்கற்கண்டு வால் மிளகு பால் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கும் கசாயத்தை கொடுப்பதால் தொண்டைப்புண் குணமாகும் இந்த அதிமதுர கசாயத்தை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் ஆறும்.

சிலர் காலை உணவு சாப்பிடுவது நாள் வயிறு மற்றும் குடல் அல்சர் ஏற்பட்டு அவதிப்படுவர். இவர்கள் அதிமதுர பொடி செய்து நீரில் போட்டு கலக்கி இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலை அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்

அதிமதுரத்தின் வேரை தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர இளநரை நீங்குவதோடு தலைமுடி பளபளப்பாக மாறும்.
அதிமதுரத்தை தூள் ஆக்கி எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது குணமாகும்.
அதிமதுரத்துடன் ரோஜா இதழ் சோம்பு போன்றவற்றை சம அளவு எடுத்து இடித்து சலித்து இரவு ஒரு ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
அதிமதுரம் கடுக்காய் மிளகு போன்றவற்றை சம அளவு எடுத்து இளம் சிவப்பாக வறுத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சூட்டினால் ஏற்படும் இருமல் குணமாகும்.

அதிமதுர துண்டை வாயில் கடித்து அதன் சாற்றை குடித்து வர இருமல் குறையும் அதிமதுரம் கடுக்காய் திப்பிலி மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து கொண்டு நெய்யில் சேர்த்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கி கண் ஒளிபெறும்.

Amazon.in link: https://amzn.to/2MbypN1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *