திப்பிலியின் சித்த மருத்துவ குணங்கள்
மருத்துவ குணங்கள்

திப்பிலியின் சித்த மருத்துவ குணங்கள்

திப்பிலியின் சித்த மருத்துவ குணங்கள்
திப்பிலியானது வெற்றிலை மற்றும் மிளகு வகையை சார்ந்தது இதன் பூக்கள் மிகவும் சிறியதாகவும் இரண்டு முதல் ஐந்து சென்டி மீட்டர் நீளமுள்ள சரத்தில் நெருக்கமாகவும் மாறாக மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் சித்த மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுகிறது.

திப்பிலியின் இலைகள் மற்றும் பழங்கள் ஆகியன நோய் எதிர்ப்புத் திறன் கொண்டவை இது இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. இது மருத்துவ பயன்பாட்டிற்காக பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது.
திப்பிலியின் காய்கள் மருந்து பொருட்கள் வாசனை பொருட்கள் மற்றும் உயர் ரக மதுபான வகைகள் தயாரிப்புக்கு பெரிதும் பயன்படுகிறது.
காசநோயின் கிருமிகளை எதிர்க்கும் திறன் இதற்கு உண்டு. திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

திப்பிலி இருமல் காசநோய் தொண்டைக்கட்டு சளி காய்ச்சல் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்ற மருந்தாகும்.

பச்சை திப்பிலி கபத்தை உண்டாக்கும் எனவே உலர்ந்த திப்பிலியை கபத்தை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

திப்பிலி செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கண்டத்திப்பிலி என்ற மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

திப்பிலியின் மருத்துவம்
வயிற்றுவலி வயிற்றுப் பொருமல் ஆகியவை குணமாக திப்பிலி மிளகு தோல் நீக்கிய சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து வறுத்து தூள் செய்து அதனை அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து கொடுக்க காலை மாலை மதியம் என மூன்று வேளைகளும் ஏழு தினங்கள் எடுத்து வர வயிற்றுவலி வயிற்றுப் பொருமல் குணமாகும்.

திப்பிலி தூள் அரை கரண்டி அளவு தேவையான அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வர தேமல் நோய் குணமாகும் திப்பிலியை தூள் செய்து அரை கரண்டி அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வர குரல் வளம் மேம்படும்.

காய்ந்த திப்பிலியை சுத்தம் செய்து நெய்யுடன் வறுத்து அதனை தூள் செய்து அரை கரண்டி காலை மாலை வேளைகளில் அரை தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டுவர தொண்டைக்கட்டு நாக்கு சுவையின்மை முதலியவை தீரும்.

திப்பிலியை தூளாக்கி அதனுடன் இரண்டு பங்கு அளவு வெல்லம் சேர்த்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் திப்பிலி துளை கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
திப்பிலிப் பொடி கடுக்காய் பொடி ஆகியவைகளை 10 கிராம் அளவு எடுத்து தேன் விட்டுக் குழைத்து அரை ஸ்பூன் அளவு காலை மாலை என சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.

திப்பிலி பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர இருமல் கபம் வாய்வு தொல்லை மற்றும் செரிமான கோளாறு நீங்கும்.

Amazon Link: https://amzn.to/33qdmeJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *