கடுக்காயின் மருத்துவ குணங்கள்
மருத்துவ குணங்கள்

கடுக்காயின் மருத்துவ குணங்கள்!!!!

கடுக்காயின் மருத்துவ குணங்கள்!!!!

கடுக்காயின் மருத்துவ குணங்கள் கடுக்காய் பொடி செய்து கொண்டு பல் துலக்கினால் ஈறு வலி குணமாவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும் பல்லும் உறுதியாகும்.

கடுக்காய் வயிற்றுவலி, இரைப்பை, தொண்டை நோய், கண் நோய், வாதம், வயிற்றுப்புண், மஞ்சக் காமாலை, நாவறட்சி, குஷ்டம், போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

கடுக்காய்- நெல்லிக்காய்- தான்றிக்காய் மூன்றும் கலந்த பொடிகளை இரவில் தண்ணீரில் காய்ச்சி வைத்துவைத்துக்கொண்டு அந்த நீரை காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

கடுக்காய் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து இந்துப்புடன் தினமும் இரண்டு கிராம் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

கடுக்காய் சிறுநீர் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்த மூலம், நீர்க்கட்டி, இதய நோய், பௌத்திரக் கட்டி இரத்த பேதி சர்க்கரை நோய் இதய நோய் உடல் பலவீனம், மூட்டு வலி, உடல் பலவீனம் உடல் பருமன் ரத்தக் கோளாறுகள் போன்ற அனைத்துக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.

கடுக்காய் கண்பார்வை கோளாறுகள் பித்த நோய்கள் வாய்ப்புண் நாக்குப்புண் அக்கி படை தேமல் தோல் நோய்கள் உடல் உஷ்ணம் காது கேளாமை சுவையின்மை வெள்ளைப்படுதல் போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு ஈறுகளில் உண்டாகும் புண் வாயில் ஏற்படும் வாடை பல் அசைவு போன்ற நோய்களை போக்குவதற்கு கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளித்தால் குணமாகும் கடுக்காய் பொடி சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கடுக்காயை இரவில் தொடர்ந்து சாப்பிட்டு வர பெரும்பாலான நோய்கள் நீங்கி இளமையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும்.

இதனை சித்தர் கூறும் பாடல் “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *