தலைமுடி நன்கு வளர பொடுகை நீக்க
மருத்துவ குணங்கள்

தலைமுடி பராமரிப்பு நன்கு வளர பொடுகை நீக்க

தலைமுடி பராமரிப்பு நன்கு வளர பொடுகை நீக்க


தலைமுடி பொடுகை நீக்க தலையில் இருக்கும் பொடுகினை எளிதில் நீக்க ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தயத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும் இந்த கலவையை அனைத்து தலைமுடியில் நன்கு மசாஜ் செய்வது போல தேய்த்து அரை மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு குளித்து வரவும்.

இவ்வாறு செய்வதால் தலையிலுள்ள பொடுகு தொல்லை நீங்கும். இது போன்று வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் தலையில் உள்ள பொடுகு தொல்லை நீங்கும்

தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை. ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலவையாக செய்து தேய்த்துக் குளித்தால் முடி கருமையாக பளபளப்பாக வளரும்

மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறையும் இரண்டு ஸ்பூன் வெந்தயம் பவுடர் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையை முதல் நாள் இரவே தயார் செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் அரைத்த மருதாணி கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவினால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் தலை முடி நன்றாக வளரும்.

தலை முடியை சீராக வளர எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமான ஒன்றாகும்.

வேப்பிலை இலையை அரைத்து தலையில் தடவி குளித்து வர முடி உதிர்வது குறையும்


தலைமுடி கறுமையும் பலப்பல பெற்றுத்தருவது கற்றாழையின் பங்கு முக்கியமானது. கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற பசையை தலையில் அழுத்தித் தேய்த்துக் குளிக்க முடி உதிர்வது படிப்படியாக குறையும்.

மேலும் 2 மேஜைக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் முதல்நாள் ஊறவைத்து அதனை பசைபோல் அரைத்து தலையில் தடவ முடிஉதிர்தல் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அந்த கலவையை இரவு தூங்கும் போது தலையில் தடவி காலையில் நன்கு அலசினால் தலைமுடி நன்கு வளரும்.

Amazon Link: https://amzn.to/2YO128T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *