வசம்புவின் ஏராளமான மருத்துவப் பயன்கள்

வசம்புவின் ஏராளமான மருத்துவப் பயன்கள் வசம்பு ஆறு, ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு. வசம்புவின் வேர் மற்றும் இலைகள் பயன்தரும் பாகங்கள். பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்று அழைப்பர்.

வசம்புவின் ஏராளமான மருத்துவப் பயன்கள் வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன் படுகிறது. இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும். வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையுடையவை. இதன் தண்டு வேர் பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற்பகுதி சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி நீளம் வரை படரும். வேர்கள் தான் வசம்பு என்பது. இது நல்ல வாசனையையுடையது.

வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோடு நுண்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.

வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு வசம்பு உரசி வாயில் வைப்பதன் மூலம், உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மை ஏற்படாமல் தடுக்கலாம். கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் வராமல் தடுக்க, பசியைத் தூண்ட, சோம்பலைப் போக்க பயன்படுகிறது.

வசம்பை தூள் செய்து, தேனில் 2 ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் நீங்கும். விஷம் அருந்தியவர்களுக்கு 3 ஸ்பூன் வசம்புவை கொடுத்தால், விஷம் முழுக்க வெளியே வந்துவிடும்.

காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை, தொற்று நோய்கள் வராது.

வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.

வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.

வசம்பைக் கருக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை தீரும்.

வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைக்க, உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டைக் கம்மல் இருமலை அகற்றும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் சுரம், இருமல், வயிற்றுவலி இவை குணமாக வசம்புடன் அதிமதுரம் சேர்த்து கசாயமிட்டு காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கக் குணமாகும்.

வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு திருந்தும்.

சியைத் தூண்டவும், அஜீரணத்தைப் போக்கி வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கவும் வசம்பு ஒரு பங்கும் பத்து பங்கு வெந்நீரும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி பதினைந்து மி.லி. முதல் முப்பது மி.லி. வீதம் அருந்தி வர வேண்டும். குழந்தைகளுக்கு உண்டான கழிச்சலுக்கும், முறைக் காச்சலுக்கும் இதனை கொடுக்கலாம்.

வசம்பு உடன் சுடான தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

வயிறில் சேர்ந்த வாயுவை அகற்ற வசம்பை அடுப்பில் வைத்து சுட்டுக் கரியாக்கி, அதனை தேங்காய் எண்ணையுடன் கலந்து அடி வயிற்றில் பூசவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *