நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்

நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் நினைவாற்றலில் மூன்று படிகள் அடங்கியுள்ளன: தகவலை உருவகப்படுத்துவது, அதைத் தக்கவைத்துக்கொள்வது, அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது. தகவலை உங்கள் மூளை அறிந்து, புரிந்துகொள்ளும்போது அதை உருவகப்படுத்துகிறது. பின்பு நினைவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தத் தகவலைத் தக்கவைத்துக்கொள்கிறது. இந்த மூன்று படிகளில் ஏதாவது ஒன்றில் கோளாறு ஏற்படும்போதுதான் நம் அனைவருக்கும் ஞாபக மறதி உண்டாகிறது..

நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் நினைவாற்றலில் பல்வேறு வகைகள் புலன் சார்ந்த நினைவாற்றல், குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் ஆகியவை.

புலன் சார்ந்த நினைவாற்றலுக்கு முகர்தல், பார்த்தல், தொடுதல் போன்ற புலனுணர்வுகள் வாயிலாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

குறுகிய கால நினைவாற்றல் குறுகிய காலத்திற்காகச் சிறுசிறு தகவல்களைப் பதிய வைத்துக்கொள்கிறது. இதனால், மனதிலேயே கணக்குப்போட முடிகிறது.

நீண்ட கால நினைவாற்றலுக்கு ஆர்வம் காட்டுதல் நீங்கள் நினைவில் வைக்க விரும்புகிற விஷயத்தின் பேரில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அந்த விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்கான காரணங்களை அடிக்கடி நினைப்பூட்டிக்கொள்ளுங்கள். ஒரு காரியத்தை முழு ஈடுபாட்டுடன் செய்யும்போது அது என்றைக்கும் உங்கள் நினைவில் இருக்கும்.

புதுப்புது திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலமூம் புதுப்புது பாஷைகளைக் கற்றுக்கொள்வதன் மூலமூம் ஏதாவதொரு இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலமூம் உங்கள் நினைவாற்றலை முடுக்கிவிடுங்கள். மிகமிக முக்கியமான விஷயங்கள் மீது உங்கள் கவனத்தை ஊன்றவையுங்கள். நினைவூட்டும் வாசக முறையைக் கற்றுக்கொள்ளுங்கள்.

போதுமானளவு தண்ணீர் குடியுங்கள். உடலில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டால், மனக்குழப்பம் ஏற்படலாம். நன்றாகத் தூங்குங்கள். நீங்கள் தூங்கும்போது தகவல்களை உங்களுடைய மூளை நினைவில் பதியவைக்கிறது. டென்ஷனாகாமல் சாவகாசமாகப் படியுங்கள். ரொம்ப டென்ஷனாகிவிட்டால், கார்டீஸால் என்ற சுரப்பி அதிகமாய்ச் சுரந்து உங்களுடைய நரம்பின் இயக்கங்களைப் பாதிக்கும்.

அளவுக்குமீறி மது அருந்தாதீர்கள்; புகைபிடிக்காதீர்கள். மது அருந்துவது குறுகிய கால நினைவாற்றலைப் பாதிக்கிறது. குடிக்கு அடிமையாகிவிட்டால், தையமின், அதாவது உங்கள் நினைவாற்றல் சரியாகச் செயல்பட உதவும் பி-வைட்டமின் குறைந்துவிடலாம். புகைபிடித்தால் உங்கள் மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.

நினைவாற்றல் பெருகிட
பத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும். கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.

இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும்

வல்லாரைப் பொடி 100 மி.கி. அளவோடு வெந்தயப் பொடி, அரிசித் திப்பிலி, மஞ்சள் தூள் (கொம்பு மஞ்சள்) சேர்த்து சம அளவு இரவு தூங்கச் செல்லும் முன் படிக்கிற குழந்தைகளுக்கு 500 மி.கி. வரை பாலுடன் சேர்த்துக் கொடுத்தால் ஞாபக சக்தி மிகுதியாகும்.

வெண்ணெயுடன் வில்வப்பழத்தின் குழம்பு, சிறிது சர்க்கரை சேர்த்து தொடர்ந்து சாப்பிட அதிக மறதி குறையும்.

தினமும் வல்லாரை கீரையை துவரம்/பொறியல் செய்து சாப்பிடவும்.

வெண்ணீரில் தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *