தோல் நோய்களுக்கு பாரம்பரிய இயற்கை வைத்தியம்

தோல் நோய்களுக்கு பாரம்பரிய இயற்கை வைத்தியம் தோல் நோய்கள் வெவ்வேறு வகைகளில் உள்ளன. தோல் நுண்ணுயிரிகள் தோல் திசுக்குள் ஊடுருவி வந்தால் தோல் தொற்று நோய்கள் உருவாகும். அவற்றின் முக்கிய செயல்பாடு வலுவான வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இது வலி மற்றும் சிவப்புடன் சேர்ந்து வருகிறது. தோல் குமிழ்கள், முனை, கொப்புளங்கள் மற்றும் பிற அரிப்புகளை உருவாக்குகிறது.

தோல் நோய்களுக்கு பாரம்பரிய இயற்கை வைத்தியம் தோல் பூஞ்சை நோய்களில், திசு சேதத்தின் காரணமாக பல்வேறு பூஞ்சைகளின் நுண்ணுயிர் ஊடுருவி இருக்கிறது. தோல் மீது மேலோட்டமான புள்ளிகள் தோன்றுகின்றன; குறிப்பிடத்தக்க சிவப்பு. மிக பெரும்பாலும் அது அரிப்பு சேர்ந்து. நோய் வளர்ச்சியுடன், ஃபோசை வளரும்.

மனித சருமத்தின் ஒவ்வாமை நோய்கள் அரிக்கும் தோலழற்சி மற்றும் தோல் நோய். அவர்களது அறிகுறிகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் பெரும்பாலும் அவை சிவப்பு நமைச்சல் புள்ளிகளாக இருக்கின்றன,

வசம்பை இடித்து பொடி செய்து, அதை தேங்காய் எண்ணெயில் போட்டு சிவக்க கொதிக்க வைத்துப் பின்பு வடிகட்டி சிரங்கு மீது பூசி வந்தால் சிரங்கு குறையும்.

சீமை அகத்தி இலைகளை எடுத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து படர் தாமரை இருக்கும் இடத்தில் போட்டு நன்கு தடவி வந்தால் படர்தாமரை குறையும்.

வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பரங்கிச் சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குறையும்.மோர், பால் ஆகியவற்றில் கலந்த உணவைச் சாப்பிட வேண்டும். புளிப்பு, காரம், இனிப்பு, மாமிசம், புகை ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.

அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.

மருதாணி இலையை உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். மருதாணி பவுடர் 50 கிராம், வாய்விலங்கம் 10 கிராம் வறுத்துப் பொடி செய்தது ஆகியவற்றை பசும்பாலுடன் கலந்து தடவி வந்தால் உடலில் ஏற்படும் வெள்ளைத் தழும்பு குறையும்.

ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் நன்கு காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் குறையும்.

நன்னாரி வேர் சூரணம் 1/2 கிராம் எடுத்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குறையும்.

முல்லைப் பூ செடி வேர், வசம்பு இரண்டையும் இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.

குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் சரும நோய்கள் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *