ஜலதோஷம் காய்ச்சல் குறைய கை வைத்தியம்

ஜலதோஷம் காய்ச்சல் குறைய கை வைத்தியம்   ஜலதோஷம் வர்றதுக்கான அறிகுறி தெரிஞ்சவுடனே பொறுக்குற சூட்டுல உ‌ள்ள வெந்நீரை குடிச்சாலே போதும். ஜலதோஷம் பிடிக்காது. தொண்டை கரகரப்பு இருந்தா காலையில கண்முழிச்சதும் வெதுவெதுப்பான தண்ணியில கல் உப்பை போட்டு கலந்து தொண்டை கொப்புளிங்க.

ஜலதோஷம் காய்ச்சல் குறைய கை வைத்தியம் வெற்றிலையை இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளிக் குறையும்

கொள்ளை அவித்து, நீரை வடித்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும். அறிகுறிகள்: ஜலதோஷம். மூக்கில் நீர்வடிதல். தும்மல். சளி. தேவையான பொருட்கள்: கொள்ளு. செய்முறை: கொள்ளை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து அவித்துக் கொள்ளவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.

வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குளிர்காய்ச்சால் ஏற்படும் ஜன்னி குறையும்.

சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால் ஜலதோஷம் குறையும்.

முருங்கப்பட்டையை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு நன்கு அவித்து சாறு எடுத்து ரசமாக்கி குடித்து வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.

மாதுளம் பழத்தை எடுத்து கழுவி அதை தினமும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.

அரிசிதிப்பிலியை காயவைத்து இடித்து வெற்றிலைச்சாறு தேன் ஆகியவற்றை கலந்து குழைத்து சாப்பிட சுரம் குறையும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.

தென்னைமரத்து வேர், சிற்றரத்தை, இஞ்சி ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கசாயமாக்கி பாதியாகச் சுண்டச் செய்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 30 மில்லி வீதம் குடித்துவர சகல காய்ச்சல்களும் குறையு‌ம்.

புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரில் ரசப்பொடி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பிறகு அதில் பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் சிறிதாக அரிந்த திப்பிலி இலை அல்லது திப்பிலி பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து மூடி போட்டு, மூடிவிடவும். கடைசியாக நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து, ரசத்தில் சேர்த்தால், திப்பிலி ரசம் தயார்.

இந்த ரசத்தை இளஞ்சூடாக பருகலாம். அல்லது, சாதத்தில் கலந்து உண்ணலாம். சளித் தொல்லை, இருமல், குழந்தை மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படும் ஆஸ்துமா போன்ற நோய் நிலைகளில் இந்த ரசம் உண்பதால் நல்ல பலன் தெரியும். திப்பிலி, சுவாசப் பாதையை விரிவடையச் செய்யும், சளியை வெளியேற்றும்: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், அலர்ஜியை குறைக்கும்.

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

சுக்கு, மிளகு, அக்கரா, திப்பிலி, கடுக்காய் இவற்றை சம எடை வாங்கி உரலில் (மிக்ஸியில் போட்டு அல்ல) போட்டு இடித்து பொடியாக்கி வெள்ளை துணியில் போட்டு பவுடராக அரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை: சளி ஏற்ப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைக்கும் இதை கால் மேஜை தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் அரை, அல்லது ஒரு சிட்டிகை அளவுக்கு ( சிட்டிகை என்பது நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கொண்டு அந்த பொடியை எடுக்கும் அளவு) எடுத்து தேனில் கலந்து கொடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *