சிறுநீரகக் கல் பிரச்சனை விடுபட இயற்கை மருத்துவம்

சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு கை வைத்தியம்  சிறுநீரகங்கள் கழிவுகள், நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது. சிறுநீரகங்கள், ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கின்றன. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க உதவுகின்றன.

சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு கை வைத்தியம் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பசியின்மை, சோர்வு, உடல் நலிவு ,இரத்த சோகை, நீரிழிவு, அசதி , வாந்தி, கீழ்முதுகில்வலி, உயர் இரத்த அழுத்தம், அஜிரனம், அரிப்பு, கால்களில் பிடிப்பு , இரவில் அடிக்கடி சிறுநீர்கழித்தல் சிறுநீரக நோயின் அறிகுறிகள்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்

சிறுநீரக பாதிப்பால் இதயம்,நுரையீரல் மற்றும் மூளைக்கு ஏற்படும் மிக மோசமான கேடுகள்

உடலில் திரவங்களின் மிக அதிக சேர்க்கை.  மூச்சுத்தினறல், கை,கால்,முகம் வீக்கங்கள். இரத்த்தில் பொட்டாசியத்தின் அளவு வெகுவாக கூடுதல்-இதயத்தை மிகவும் பாதிக்கும். நுரையீரல் பாதிப்பால்-மூச்சுவிடுவதில் மிகவும் சிரம்ம்.ஹார்மோன்கள் ஊற்பத்தி குறைவு

சிவப்பு அனுக்களின் உற்பத்தி குறைவு. இரத்த சோகை. உடலுக்கு எடுத்துச்செல்லும் ஆக்சிஜன் குறைவு. இரத்த அழுத்தம் உயர்கிறது.  சோடியத்தின் அளவு உயர்வு மாறும்-நினைவு நிலை பாதிக்கும். பொட்டசியத்தின் அளவு மாறும். இதயம் துடிக்கும் வேகத்தில் மாறுதல்,

சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு

மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.

வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாறு எடுத்து குடித்திட சிறுநீரக கோளாறுகள் குறையும்.

பரங்கிகாய் விதை, வெள்ளரி விதை, பூனை காலி விதை இவற்றை நன்கு சுத்தம் செய்து நீர்விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் செய்து குடித்துவர சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.

முருங்கை பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் மிகுதியாக பிரிதல் குறையும்.

அம்மான் பச்சரிசி இலையை எடுத்து நன்கு அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குறையும்.

அன்னாசி பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பின் அளவை குறைத்து சிறுநீரக கோளாறுகள் குறையும்.

கேரட்டை சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை தினமும் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் குறையும்.

கருஞ்சீரகத்தை நன்கு இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு குறையும்.

10 கிராம் நாவல் பழக்கொட்டையை பொடியாக்கி 1 லிட்டர் நீருடன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு குறையும்.

ஒரு நெருஞ்சில் செடியை வேருட‌ன் கொண்டு வ‌ந்து க‌ழுவி சுத்த‌ம் செய்து உர‌லில் போட்டு சாறு எடுத்து அரை ட‌ம்ள‌ர் சாற்றில் மோர் க‌ல‌ந்து காலையில் ம‌ட்டும் 7 நாள் கொடுக்க‌ சிறுநீர‌க‌க் கோளாறு எதுவானாலும் பூர‌ண‌ குண‌ம் ஏற்ப‌டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *