முகம் பளபளப்பாக அழகு குறிப்புகள்

முகம் பளபளப்பாக அழகு குறிப்புகள்  உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

முகம் பளபளப்பாக அழகு குறிப்புகள் வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்து, ஓட்ஸ் தனியாக அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்தால், முகம் பளிச்.

கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும். வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும். தர்பூசணி பழச்சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.

கசகசாவுடன் தண்ணீர் விட்டு அரைத்து அதன் பாலை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சரும செல்களைப் புதுப்பித்துப் புத்துணர்ச்சி தரும். மேலும், சரும கருமையையும் கருவளையத்தையும் நீக்குவதில் வல்லது. சிலருக்கு இது சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர முகம் பொலிவு உண்டாகும்.

தேங்காய்ப் பாலை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், வறண்ட சருமம் மாறி, முகம் புதுப்பொலிவு பெறும்.

கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை திட்டமான முறையில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக் குறையும்.

சிறிதளவு கடலை மாவை பாலேட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயிற்றம் மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.

ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து இழைத்து குழந்தைகளுக்குக் கன்னத்தில் கருப்புள்ளியுடன் சொர சொரப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் கன்னத்திலுள்ள கருப்புப் புள்ளி குறையும்.

சந்தனத்தை நன்கு அரைத்து முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *