பல் பிரச்சனை சரிசெய்ய சில இயற்கை வழிகள்

பல் பிரச்சனை சரிசெய்ய சில இயற்கை வழிகள்  பேசும் சொற்கள் தெளிவாக இருக்கவும், வலிமையாக இருக்கவும் பற்கள் அவசியம். இது, உடல் நலன் சார்ந்தது என்பதால், பல் பராமரிப்பு முக்கியம்

பல் பிரச்சனை சரிசெய்ய சில இயற்கை வழிகள் ‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகளின் பக்க விளைவுகள், ரத்தப் புற்றுநோய், எய்ட்ஸ் நோய் இவைகளும் மெதுவாக பல் ஈறுகளை பாதிக்கச் செய்து ஈறு நோயை உண்டு பண்ணுகிறது.

 பற்கள் இறுதிவரை உறுதியாக இருக்க

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் நிறைய தண்ணீர் கொண்டு வாயை நன்றாக பலமுறை கொப்பளியுங்கள்.

தினமும் காலையில் எழுந்ததும், வாயில் நல்லெண்ணெயை ஊற்றி, சிறிது நேரம் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயில் இருக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் மற்றும் இதர வாய் பிரச்சனைகள் நீங்கும்.

தினமும் சிறிது பூண்டு துண்டை வாயில் போட்டு மென்று வர, ஈறுகளைத் தாக்கிய கிருமிகள் அழிக்கப்பட்டு, ஈறு நோய்கள் பரவுவது தடுக்கப்படும்.

வேப்பிலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று வர, வாயில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம், சொத்தை பல் மற்றும் ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியமும் மேம்படும்.

உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிக்க, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.

கருவேலம் பட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து அதில் 30 கிராம் எடுத்து அதனுடன் 6 கிராம் கிராம்பு, மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும்.

கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.

பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் குறையும்.

பல் வலி ஏற்படும் போது பற்களின் மீது தேனை தடவி விட்டு உமிழ்நீர் பெருகி வாயிலிருந்து வெளியேற செய்து வந்தால் பல் வலி குறையும். பல்லில் ஓட்டை அல்லது புழு வெட்டு இருந்தால் தேனை பல்லில் படும்படி நிரப்பி வாய் கொப்பளித்து வந்தால் கிருமிகள் குறையும்.

இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *