ஞாபக மறதி நிவர்த்தி செய்ய பாரம்பரிய சிகிச்சை

ஞாபக மறதி நிவர்த்தி செய்ய பாரம்பரிய சிகிச்சை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய் அறிகுறிகளின் எதையும் கொண்டிருக்காத குறைபாடாகும், இதில் ஞாபகத்திறன், கவனம், மொழி மற்றும் சிக்கல் தீர்த்தல் போன்றவற்றில் உளவியல் குறைபாடானது ஏற்படக்கூடும்.

ஞாபக மறதி நிவர்த்தி செய்ய பாரம்பரிய சிகிச்சை குறுகிய கால அளவுக்கு நீடிக்கும் கவனிப்பு திறனில் ஏற்படும் மங்குதல், உளத்தடுமாற்றம். எல்லாவகையான பொது கவனிப்பு திறன் மங்குதல் குறைபாடுகளிலும், உயர் மனநிலை செயல்பாடுகள் முதலில் பாதிக்கப்படுகின்றன.

ஞாபக சக்தி எனப்படுவது. தான் அனுபவித்த, கற்றறிந்த விடயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒருநிலைப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மனதை எந்தளவுக்கு ஒருமுகபடுத்தி ஒரு விடயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அது மனதிலே பதிகின்றது.

ஆர்வமின்மை, முயற்சியின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும் மனபாதிப்புகள், மன ஒருமையின்மை, கவனக்குறைவு, தப்பிக்கும் மனோபாவம், கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல். புகை, மது, போதைப் பழக்கங்கள், உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள் வலிப்பு, ரத்தசோகை, உயர் (அ) குறை தைராய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்சனைகள்) என்பன மனிதனின் சிந்திக்கும் திறனை அதிகம் பாதிக்கின்றன.

பாரம்பரிய சிகிச்சை

வெண்ணீரில் தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம் போல செய்து காலை, மாலை குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி குறையும்.

மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு ஆகியவைகளை சமஅளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். அத்தூளில் 1.4 ஸ்பூன் எடுத்து பசு நெய்யில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மனதை ஒரு நிலைப்படுத்துதல்

யோகாசனம், தியானம், சமய வழிபாடுகளில் ஈடுபடல் போன்றவை மூலமாக ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களை குடியேற்றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலை பெற முடியும்.

உடற்பயிற்சி, மூளைக்கு பயிற்சி வழங்குதல், போசாக்கான உணவு, போதியளவு உறக்கமும் ஓய்வும், முதிய வயதிலும் ஏதாவது பணிகளை செய்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *