கால் ஆணி ஏற்பட காரணம் தடுக்க சிகிச்சை முறை

கால் ஆணி ஏற்பட காரணம் தடுக்க சிகிச்சை முறை  காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கு வருகிறது.

கால் ஆணி ஏற்பட காரணம் தடுக்க சிகிச்சை முறை  கால் ஆணி என்பது பாதத்தில் ஆணி போன்ற ஒரு வளர்ச்சி இருக்கும். அதன் வெளிப்பகுதி கடினமாக இருக்கும். உள்முனை சதையின் உள் பதிந்து வளர்கிறது. நிற்கும் போது, மற்றும் நடக்கும் போது இந்த பகுதியில் அழுத்தம் கிடைப்பதால் வலி ஏற்படும்.

காலில் ஆணி வந்து விட்டால், பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

கடினமான கால் ஆணி சிறிய தட்டையான கடினமான தோல் போன்ற அமைப்பு வெளியில் தென்படும். ஆனால் உள்ளே ஆணி போன்று வளர்ந்து இருக்கும்.

மிருதுவான கால் ஆணி வெளியில் வெண்மையாக மிருதுவான தோல் இருக்கும். சில நேரம் சிவந்து காணப்படும். விரல்களுக்கு அடியில் காணப்படும்.

விதை ஆணி வித்துகள் போன்று 5 க்கும் மேல் ஒரே இடத்தில் அதிக அழுத்தம் கிடைக்கும் இடத்தில் இருந்து வலியை உருவாக்கும் வகையினை விதை ஆணி என அழைக்கின்றனர்.

காலில் ஆணி ஏற்பட காரணங்கள்

முறையற்ற விதத்தில் நடப்பதாலும், சரியான அளவில் இல்லாத, ஒத்துக் கொள்ளாத காலணி அணிவதாலும், குதிகால் உயர்ந்த காலணிகள் அணிவதாலும், அதிக நேரம் நிற்பதாலும், கரடு முரடான பாதையில் நடப்பதாலும் ஏற்படலாம். பிறவியிலேயே பாதத்தில் குறைபாடுகள் இருக்கும் போது காலுறை இன்றி காலணிகளை போடும் போது அழுத்தம் ஏற்படும். அதிக நேரம் தண்ணீரில் பாதங்கள் நனையும் போதும், காலணி அணிந்திருக்கும் போது வியர்வை அதிகம் இருந்தாலும் நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டு சலம் ஏற்படும்.

கால் ஆணி தடுக்க சிகிச்சை முறை
சரியான காலணிகளை போடவேண்டும். தினமும் காலை தேய்த்து கழுவி சுத்தம் பேண வேண்டும். தட்டையான இடத்தில் தான் நடக்க வேண்டும். குதிகால் உயர்ந்த காலணிகளை தவிர்க்க வேண்டும்.

அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.

1 கிராம் சமையல் சோடாவை எடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும்.

வெள்ளறுகுயை அரைத்து கால் ஆணி மீது வைத்து கட்டினால் கால் ஆணி குறையும்.
மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

பப்பாளிகாயை அரைத்து கால் ஆணியில் கட்டி வைக்கலாம். சுண்ணாம்பை காலில் வைத்து கட்டலாம். ஆப்பசோடாவுடன் எலுமிச்சசை சாறு கலந்து கட்டலாம். சிடார் வினிகரில் 20 நிமிடம் காலை ஊற வைத்து கால் ஆணியில் ஆப்ப சோடா வைத்து கட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *