தூக்கமின்மை பிரச்சினைகள் தீர சித்த மருத்துவம்

தூக்கமின்மை பிரச்சினைகள் தீர சித்த மருத்துவம்  தூக்கமின்மை மனித உடலை பெரும்பாதிப்பிற்குள்ளாக்கும் ஒரு வகை நோயாகும். கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவைதான் தூக்கம் பாதிக்கப் படுவதற்கு அடிப்படைக் காரணம். இரவு நேரங்களில் தூங்காமல் நைட் டியூட்டி பார்க்கும் பணியாளர்களுக்கும் வெகு விரைவில் தூக்கமின்மை பிரச்சினை வருவது உறுதி.

தூக்கமின்மை பிரச்சினைகள் தீர சித்த மருத்துவம்  உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும். தினமும் முறையான நேரத்திற்கு தூங்கச் செல்லுதல், தூங்குமிடத்தில் அதிக வெளிச்சமின்மை இருத்தல் ஆகியவற்றுடன் மதிய நேர குட்டித் தூக்கத்தை குறைப்பதும், மனக்கவலைகளை ஓர ங்கட்டுதலும் வேண்டும்.

அதேநேரம் தூக்கமின்மையால் ஏற்படும் உடலியல் மாறுபாடு காரணமாகத் தலைபாரம், உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன.

தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனின் அளவு குறைந்தும், பசியை அதிகமாகத் தூண்டும் ஹார்மோனின் அளவு அதிகரித்தும் உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் ‘குளுகோஸ்’ வளர்சிதை சக்கரம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இரவில் ஒரு டம்ளர் பாலை அருந்தவும். இரவில் மது அருந்தும் பழ க்கத்தை கைவிடவும். புகைப்பிடிப்பதையும் கைவிட வேண்டும். மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சி, சத்தான உண வுகளும் இனிய தூக்கத்திற்கு வழிவகுக்கும்

தூக்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று அமைதியாக எவ்வித மன சஞ்சலமும் இன்றி நிம்மதியாக தூங்குதல். இரண்டாவது வகை தூக் கத்தில் ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனது மனம் விழித்துக் கொண்டே இருக்கும். அன்றைய தினம் வீட்டிலோ, காரி யாலயத்திலோ இடம்பெற்ற அல்லது இடம்பெற்றிருக்கும் என்று நாம் மனதிலேயே நினைக்கும் நிகழ்வுகள் ஒரு கனவாக அல்லாது, தூக்கத்திலும் விழித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் மனத்திரை யில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.

திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து தினமும் படுக்கும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

வேப்பம் இலைகளை எடுத்து நன்கு வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கி வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

1 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

தர்ப்பை புல்லை தலையணை கீழ் வைத்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும்

1 டம்ளர் வெது வெதுப்பான பாலை எடுத்து அதனுடன் சிறிது இலவங்கப்பட்டை பொடி மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *