முதுகு வலி பிரச்சனை -- பாரம்பரிய சிகிச்சைகள்

முதுகு வலி பிரச்சனை — பாரம்பரிய சிகிச்சைகள் முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது. இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, கீழ்முதுகு வலி அல்லது வாலெலும்பு வலி என பிரிக்கப்படும். இது திடீரென்றும், அல்லது நாட்பட்ட வலியாகவும், நிலையானதாக இருக்கும்.

முதுகு வலி பிரச்சனை — பாரம்பரிய சிகிச்சைகள் முதுகு வலி  வந்து போவதாக இருக்கும், ஒரே இடத்திலிருக்கும் அல்லது மற்ற பாகங்களுக்கு பரவுவதாக இருக்கும். இது மந்தமான வலியாக அல்லது ஊடுருவிப் பாயும் அல்லது மிகுவான அல்லது எரியும் உணர்வையும் உண்டாக்கலாம். வலி கைக்கும்,, மேல் முதுகு அல்லது கீழ் முதுகு கால் அல்லது பாதத்திற்கும் பரவலாம். வலியல்லாமல் பலவீனம், உணர்ச்சியின்மை அல்லது முள் போன்று குத்துதல் போன்ற மற்ற அறிகுறிகளும் உட்படலாம். முதுகுவலி மனிதர்களை மிகவும் அடிக்கடி தொந்தரவு செய்யும் பிரச்சனையாகும்.

முதுகுத்தண்டென்பது நரம்புகள், மூட்டுகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்களுள்ள சிக்கலான ஒன்றோடொன்று இணையும் ஒரு பிணையமாகும். இவையனைத்தும் வலியை உண்டாக்கக்கூடியவையாகும். முதுகுத்தண்டில் தோன்றி கால்களுக்கும், கரங்களுக்கும் செல்லும் பெரிய நரம்புகள் வலியை முனையுறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லக்கூடும்.

பாரம்பரிய சிகிச்சைகள் முறைகள்

வலியைக் குறைக்க உடற்பயிற்சிகள் சிறந்தது. தொடர்ச்சியான உடல் நீட்சிப் பயிற்சியும், உடற்பயிற்சியும் ஒரு முக்கிய அங்கமாகும்.

கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர் மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.
நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 முறைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை. வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குறையும்.

வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.

சிறிது உலர்ந்த இஞ்சி பொடியுடன் இரண்டு கருப்பு மிளகு, தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *