மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்

மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்   மூக்கடைப்பானது   நாசிக் குழி வீக்கமடைந்து, சளி அதிகம் சேரும் போது, மூக்கில் அடைப்பு ஏற்படும். இறுதியில் சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் முகத்தில் சளி அதிகம் இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு இரவு நேரத்திலும், மிகவும் குளிர்ச்சியான காலநிலையின் போதும் ஏற்படும்.

மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம் மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன.

தினம் காலை எழுந்திருக்கும் போதே சளியினால் மூக்கடைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேம்பு, மிளகு, தேன் மற்றும் மஞ்சள் உட்கொள்வது மிக நல்லது.

ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்

கைக்குட்டையில் 2-3 துணிகள் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி, அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சிறிது மிளகுத் தூளை நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அத்தருணத்தில் தும்மல் வரக்கூடும். இருப்பினும் இந்த செயலை தொடர்ந்து செய்து வந்தால், சளி வெளியேறி, மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

மூக்கில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் போது, சூடு நீர் குளியலை மேற்கொண்டால், உடனே மூக்கடைப்பு நீங்கிவிடும்.

வெங்காயத்தை நறுக்கி, அதனை நுகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு நீங்கும்.
10 அல்லது 12 மிளகாய் இரவில் இரண்டு ஸ்பூன் தேனில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை சாப்பிட வேண்டும். மிளகை நன்கு மென்று சாப்பிடுவது நலம். இதன் மூலம் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.

புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

புதிய ரோஜா மலரை எடுத்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

ஆகாயத்தாமரை, ஆதொண்டை வேர் இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணெயை த‌லைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு குறையும்.

நொச்சி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுத்து, சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க மூக்கடைப்பு குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *