மூலநோய் குறைய பாட்டி வைத்தியம்

மூலநோய் குறைய பாட்டி வைத்தியம்    மூலம், என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக் கூடியது மூல நோய்

.
மூலநோய் குறைய பாட்டி வைத்தியம் மூல நோய் உள்மூலம், வெளிமூலம், பவுத்திர மூலம் மூன்று வகைகள் உள்ளது.

மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீண்டு வரும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும்.

மலத்துளையின் அருகில் சிறிது சதை வளர்ந்து தொங்கும். இப்பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதுடன், மலம் வெளியேறும்போது இரத்தமும் சிந்தும்.

உள் மூலம் முதிர்வதால் பவுத்திரம் தோண்றுகிறது. பவுத்திர நோய் தோன்றுகையில் மலத்துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறி சிறு துளைகள் தோன்றி அதனின்று தூய்மையற்ற சீழ் வெளிவரும்.

பைல்ஸ் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

இயற்கை வைத்தியம்
வல்லாரை இலைகளை உலர்த்தி பொடி செய்து சூடாக இருக்கும் பசும்பாலில் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து சர்க்கரை கலந்து காலை, மாலை குடித்து வந்தால் பக்கவாதம், மூலம் ஆகியவை வராமல் தடுக்கலாம். மேலும் இந்நோய்கள் இருப்பவர்கள் இதை குடித்து வந்தால் நோய்கள் குறையும்.

2 தேக்கரண்டி கருஞ்சீரகத்தை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் மூலம் குறையும்.

முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறுபருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

கண்டங்கத்தரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.

திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

பாகற்காயின் இலைகளை எடுத்து பிழிந்து 3 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து 1 டம்ளர் மோரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் மூலம் குறையும்.

குடசப்பாலை மரப்பட்டையை இடித்துக் கஷாயம் செய்து அதனுடன் இஞ்சியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

வாழைக் குருத்தை சுத்தம் செய்து நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனக் கடுப்பு குறையும்.

மூல நோய் இருப்பவர்கள் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி பாதியை இரவு முழுவதும் பனியில் ஊற வைத்து காலையில் அதை எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.

6 துளசி இலை, 2 கிராம் வறுத்த சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் விளாம் பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும். கல்லீரல் பலம் பெறும்.

வேப்ப விதையை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

20 கிராம் மலை வேம்பு விதையின் பருப்பை எடுத்து அதனுடன் 5 மிளகு வைத்து நன்றாக இடித்து சலித்து தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து சிறிய உருண்டை அளவு எடுத்து கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *