நரம்புத் தளர்ச்சியை குணமாக்க இயற்கை மருத்துவம்

நரம்புத் தளர்ச்சியை குணமாக்க இயற்கை மருத்துவம்  மூளையின் கட்டளைகள் பெரிய நரம்புகளுக்குப் போய்ச் சேருவதில் தொய்வு ஏற்படுகிறதோ, அதை நரம்புத் தளர்ச்சி என்கிறோம். அதாவது மூளை அனுப்பும் செய்திகள் விரைவாக உடலின் மற்றைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதில் தடை அல்லது தாமதம் ஏற்படும் போது,கை நடுக்கம் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

நரம்புத் தளர்ச்சியை குணமாக்க இயற்கை மருத்துவம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தொய்வு ஏற்படும் பொழுது, பாதங்களில் கட்டை விரல்கள் உணர்ச்சியற்று மரத்துப் போகும். சில பேருக்கு கைகள் நடுங்குவது, வேகமாகச் செயல்பட முடியாமல் சோர்வு , போன்றவை சர்வ சாதாரணமாகத் தோன்றும்.

மனநிலை, சூழ்நிலை, அதிகமான ஆசை, உடலின்பம்/சுய இன்பத்திற்குக் முழுதான காரணம் இல்லை என்றாலும் கூட,அளவிற்கு அதிகமான சுய இன்பம் கூட இதற்கு காரணமாகலாம். இதை முற்றாக ஒதுக்கி வைத்துவிட முடியாது.ஏற்கெனவே நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் மிக அதிகமாக உடல் இன்பத்தில் ஈடுபட்டால் நரம்புப் பிரச்னைகள் அதிகமாக வாய்ப்பு உண்டு.

நரம்புத் தளர்ச்சி குறைய
பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை கலந்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

வெள்ளை வெங்காயத்தை எடுத்து சுத்தம் செய்து பின்பு நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கரா ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை ஒரு ஸ்பூன் வீதம் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

பிரண்டை உப்பு ஒரு குண்டுமணி அளவு எடுத்து ஜாதிக்காயை இடித்து பொடி செய்த சூரணத்துடன் சேர்த்து நெய்யில் கலந்து சாப்பி்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் காலை, மாலை வேளைகளில் வசம்பைப் பொடியாக்கி, அரை ஸ்பூன் தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர, 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கை, கால் தளர்ச்சி குணமாகும்.

ஆடாதோடை இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில்  அக்கரகாரம், சித்தரத்தை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி அதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *