அரளிதாவரத்தின் நஞ்சுத்தன்மையும் மருத்துவப் பயனும்

அரளிதாவரத்தின் நஞ்சுத்தன்மை மருத்துவப் பயனும் அரளி விஷத் தன்மை வாய்ந்த தாவரம். இதன் மலர்களின் அலங்கார மதிப்புக்காக வளர்க்கப்படுகிறது. அரளி, செவ்வரளி என்றழைக்கப்படும் இந்த தாவரம் இந்தியா முழுவதும் தோட்டங்களிலும் கோவில் பூந்தோட்டங்களில் அன்றாட பூஜைகளுக்குப் பயன்படுத்துவதற்கென வளர்க்கப்படுகிறது.

அரளிதாவரத்தின் நஞ்சுத்தன்மை மருத்துவப் பயனும் மலர்கள், சிவப்பு அல்லது மஞ்சள், வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இத்தாவரம் தற்கொலைக்கான முயற்சியுடனும், கருக்கலைப்புடனும் தொடர்பு படுத்தப்பட்டதாகும். ஆனால் இதில் மருத்துவப் பயனும் அடங்கியுள்ளது.

இத்தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட செயல்படும் வேதிப்பொருட்களின் கராபின், நீரியோடெரின், நீரியோமோசைடுகள், நீரியாசைடு,

புளூமெரிசின்,கிளைகோசைடு, ஆகியவை முக்கியமானவை.

மருத்துவப்பயன் உடைய பகுதிகள் தாவரத்தின் எல்லா பகுதிகளிலும் மேல் பூசும் மருந்தாகப் பயன்படுகின்றன. குறிப்பாக இலைகள், வேர் மற்றும் வேர்ப்பட்டை மிக முக்கியமானவை. தோல்நோய்களுக்கு மருந்து இலைகளின் கசாயம் வீக்கம் குறைப்பான் ஆகும்.

இலைகளின் சாறு பால்வினை நோய் புண்களுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கண்நோய்களுக்கும் இலைகளின் புதிய சாறு மருந்தாகும். வேர்ப்பட்டை மற்றும் இலைகளின் களிம்பு படை மற்றும் தோல் நோய்களில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் களிம்பு தொழுநோய் நாட்பட்ட புண் மற்றும் ரத்தம் கட்டியுள்ள இடங்களில் மருந்தாக தடவப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் காரவீரதியதைலம், தோல்நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது.

புற்றுநோயை குணப்படுத்தும் ‘நைகோபோடிஸ் போடிடா” என்ற தாவரவியல் பெயர் கொண்ட அரளியின் இலை, வேர்களில் இருந்து கிடைக்கும் மூலிகைப் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உகந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.

இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல் காய்ச்சல், பித்தக் கோளாறுகள் போன்றவை நீங்கும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள் தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.

நமது உடலின் புற அந்தங்களான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள் ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர் நரம்புக்கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர் நரம்புகள் பாதிப்படைந்து விடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறைய ஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன உணர்ச்சி தோன்றி, ஆறாத புண்களாக மாற ஆரம்பிக்கின்றன.

சர்க்கரை நோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், தொழுநோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் தோன்றும் கிருமித்தொற்று, அடைப்பு காரணமாக விரல்களில் புண்கள் மற்றும் உணர்வற்று படுத்தே கிடப்பதினால் உண்டாகும் படுக்கைப் புண்கள் ஆகியன உண்டாகலாம்.

மேற்கண்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்று கட்டுப்பாடுடன் இருந்து வரும் போதிலும், சில நேரங்களில் புண்கள் உண்டாகி, அவை ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆவது மட்டுமின்றி, அந்தப் புண்களில் நீர் வடிதல், சீழ் வடிதல் மற்றும் துர்நாற்றம் வீசுதல் ஆகிய துன்பங்கள் ஏற்பட்டு, பிறர் அருகில் வருவதற்கே அருவெறுப்பு அடையும் சூழ்நிலை உண்டாகும். பலவகையான கிருமிகள் இந்த புண்களின் வழியாக உடலின் உள்ளே சென்று, பலவித நோய் களை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு என்பதால், நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்தப் புண்களை குணப்படுத்திவிட வேண்டியது அவசியம்.

அரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து, ஒன்றிரண்டாக தட்டி, அரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மி.லி., நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அழுகிய புண்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் ஆறும். படுக்கைப்புண்களில் இந்த தைலத்தை தடவி வரலாம். இது நஞ்சுத்தன்மை உடையதாகையால் உள்ளே சாப்பிடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *