இந்துப்பின் இயற்கையான மருத்துவ குணங்கள்

இந்துப்பின் இயற்கையான மருத்துவ குணங்கள்  இந்துப்பு  இமயமலை உப்பு (Himalayan salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்உப்பை தமிழில் இந்துப்பு என்பர்.

இந்துப்பின் இயற்கையான மருத்துவ குணங்கள் இமய மலைலிருந்து 310 கி மீ தொலவிலும், லாகூரிலிருந்து 260 கி மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 298 கி மீ தொலைவிலும் உள்ள உப்பு மலைத் தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.

இராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாறை உப்பு, பூமிக்கு அடியில் இருந்து, சுரங்கங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி போன்ற சில இடங்களில், கிடைகிறது.

கடல் நீரிலிருந்து தயாராகும் உப்பை, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தி வருகிறோம். உப்பை  கல் உப்பு, தூள் உப்பு எனப்பலவிதங்களில் பயன்படுத்தினாலும், அவை அனைத்தின் பலன்களும் ஒன்றுதான்.

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்பதற்கேற்ப, கரிப்பு சுவைக்காகவும், கார வகை உணவுகளில் சுவை கூட்டவும் உப்பு பயனாகிறது.

சமீப காலங்களில் கடல் உப்பை தினசரி பயன்படுத்துவதால், சிலருக்கு தைராய்டு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை உண்டாக்கும்

அயோடின் கலக்காத சாதாரண உப்பை நாம் பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை, ஆனால், அதற்கு மாற்றாக, இமாலயன் உப்பு எனப்படும், இந்துப்பை பயன்படுத்தலாம்.

முக்குற்றம் எனக்கூறும் வாதம், பித்தம் மற்றும் கபம் உள்ளிட்ட வியாதிகள் போக்கும் மருந்துகள் தயாரிப்பில், மனிதருக்கு நலம் தரும் இயற்கை தாதுக்கள் நிரம்பிய இந்துப்பும் சேர்க்கப்பட்டது.

இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது, மனச்சோர்வு நீக்கும் தன்மைமிக்கது.

தைராய்டு பாதிப்பை போக்கும் : கண்களைக்காக்கும் ஆற்றல் உண்டு. தைராய்டு பிரச்னைக்கு மருந்தாகும். குளிக்குமுன், இந்துப்பை உடலில் தேய்த்து சற்றுநேரம் கழித்து குளித்துவர, உடல் அசதி நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.

டயாலிசிஸ் எனும் இரத்த மாற்றுமுறை மூலம், சிறுநீரக பாதிப்புக்கு வைத்தியம் செய்யவேண்டிய நிலையில் உள்ளவர்கள், அல்லது சிறுநீரகத்தையே மாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் எல்லாம், ஒரு தன்னம்பிக்கை முயற்சியாக, இரண்டு வாரம், இந்துப்பு கொண்டு உணவு சமைத்து சாப்பிட்டுவர, இரத்தத்தில் உள்ள குறைபட்ட தாதுக்கள் எல்லாம் இயல்பான அளவில் சரியாகி, சிறுநீரக இயக்கங்கள் சீராகி, உடல் நலம் பெறுவர். மேலும், உடல் வேதனையும் நீங்கிவிடும்.

இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.

மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது. சாதாரண கல் உப்பில் சேர்க்கப்படும் அயோடின், இந்துப்பில் இல்லாத காரணத்தால், அனைத்து மனிதர்களும் எல்லாநாட்களிலும் உணவில் பயன்படுத்த ஏற்ற வகையில், இந்துப்பில் இயற்கையான நன்மைகள், இயல்பாகவே அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *