சூரியனார் கோயில் தோஷ நிவர்த்தி பரிகாரம் தலம்

சூரியனார் கோயில் தோஷ நிவர்த்தி பரிகாரம் தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.

முழு முதல் கடவுளாக சூரியன் இங்கே கருவறையில் அருள் பாலிக்க இது ஒரு நவக்கிரகக் கோவிலாக மலர்ந்துள்ளது.சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சூரியனார் கோவில் வளாகத்தில் சுற்றாலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன.சூரியனார் கோயில் தோஷ நிவர்த்தி பரிகாரம் தலம்  சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது. பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார். கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவான் நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் திகழ்கிறார் அவற்றில் தாமரை மலரை ஏந்தி நிற்கிறார். உஷா, சாயா (பிரத்யுஷா) என்ற இரு தேவியார் சூரிய பகவானின் இரு பக்கங்களிலும் நிற்கின்றனர்.
சூரிய பகவான் பார்வை அளிக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். ஆகையால் பார்வை குன்றியர்களும், கண்நோய் உடையவர்களும் இங்கு வந்து வழிப்பட்டு பலன் பெறுகிறார்கள்.
தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் புகழ் வாய்ந்த சூரியனார் கோவிலில் பிற கோவில்களில் இல்லாத ஒன்பது தனிச்சிறப்புகள் உண்டு தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் புகழ் வாய்ந்த சூரியனார் கோவிலில் பிற கோவில்களில் இல்லாத ஒன்பது தனிச்சிறப்புகள் உண்டு.
பிற கோவில்களில் இல்லாத ஒன்பது தனிச்சிறப்புகள் சூரியனார் கோவிலுக்கு உண்டு.
தென்னாட்டில் சூரியனுக்கு என்று தனிக்கோவில் அமைந்துள்ள தலம்.
ஒரு கோவிலுக்குள் நவக்கிரகங் களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம்.
சூரிய பகவானை அவர் சன்னிதியில் தரிசிக்கும் பொழுது குரு பகவானின் அருட்பார்வையும் ஒரு சேர கிடைக்கும் கோவில்.
நவக்கிரகங்கள் ஒவ்வொருவருமே தனித் தனிக் கோவில்களில் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் ஸ்தலம்.
வாகனங்களும், ஆயுதங்களும் இல்லாமல் அமைதி தவளும் இன்முகங்களுடன், நவக்கிரகங்கள் அருள் வழங்கும் தலம்.
நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம்.
ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரம் செய்யும் படி அமைந்துள்ள தலம்.
இரண்டு அசுபக்கிரகங்களுக்கு இடையில் ஒரே சுபக்கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்துள்ள தலம்.
நவக்கிரகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.
ஆலயத்தின் அருகில் உள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, அல்லது தீர்த்தத்தை, தலையில் தெளித்துக் கொண்டு, கோயிலுக்குள் செல்ல வேண்டும்..கோள் தீர்த்த விநாயகரை வணங்கி வழிபட்டு, நவக்கிரக உற்சவ மூர்த்திகளை தரிசிக்க வேண்டும்..
அதன் பின் ஸ்தபன மண்டபத்தில் கோயில் கொண்டருளும், ஸ்ரீவிசாலாக்ஷி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் சன்னிதிகளை வணங்கிய பின், கருவறையில், சிவசூரிய பகவானைத் தரிசித்து வழிபட வேண்டும்.. சூரிய பகவான், தம் மனைவியரான உஷா, பிரத்யுஷா தேவியருடன் அருளுகின்றார்.
சூரியபகவானை வழிபட்ட பின், மகா மண்டபத்தில், சூரியபகவானின் உக்கிரத்தைத் தணிக்கும் முகமாக, சூரியனை நோக்கியபடி, கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டருளும் குரு பகவானைத் தரிசிக்க வேண்டும்..
கருவறைக்கு வெளியே, தென்மேற்கில் சனீஸ்வர பகவானும்,தெற்கில் புதனும்,  வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும்,தென் கிழக்கில் அங்காரகனும் (செவ்வாய்), கிழக்கில் சந்திரனும் கோயில் கொண்டருளுகிறார்கள்.. அதாவது, சூரியபகவானுக்கு எட்டுத் திக்கிலும், மற்ற எட்டு நவக்கிரகங்களும் கோயில் கொண்டிருக்கிறார்கள்.. அந்த சன்னிதிகளை எல்லாம் தரிசிக்க வேண்டும். பிரகாரத்தை ஒன்பது முறை வலம் வந்து வணங்கி வழிபடுவது சிறப்பு.. கொடி மரத்தின் அருகில் வீழ்ந்து வணங்கி, பின், சற்று நேரம் சிவத்தியானம் செய்து, வழிபாட்டை நிறைவு செய்தல் வேண்டும்.
நவக்கிரகங்களுள் முதன்மையானவர் சூரிய பகவான். கார்த்திகை, உத்திரம், உத்திராட நக்ஷத்திரங்களின் அதிபதி.. சிம்ம ராசியின் அதிபதி..ஆத்மகாரகர். பித்ருகாரகர்  என்றும் அறியப்படுகின்றார்.
இவருக்கு உகந்த நிறம் சிவப்பு.. ரத்தினம்‍‍.. மாணிக்கம், தானியம்.. கோதுமை, மலர்..வெண்தாமரை, எருக்கு.
ஜாதகத்தில் சூரிய பகவானின் ஸ்தான பலம் சரியாக அமையப் பெறாதவர்கள், சூரியனார் கோயில் வந்து, முறையாக வழிபட்டு பலன் பெறலாம்.. சூரிய பகவானுக்கும், நவக்கிரகங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, வஸ்திரங்கள் சாற்றி பூஜித்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, பிரசாதத்தை விநியோகிக்க நலமுண்டாகும்.
பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் வரை(சுமார் மூன்று மாதங்கள்), இந்தத் திருத்தலத்தில் ஸ்தல வாசம் செய்வது விசேஷமான பரிகாரம்.
சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவது விசேஷம்.. ஆகவே, ஒற்றைப்படை எண்ணிக்கையில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *