நவகிரகங்களை வழிபடும் முறையும்... அதன் பலன்களும்...!

நவகிரகங்களை வழிபடும் முறையும்… அதன் பலன்களும்…! நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக  வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது.நவகிரகங்களை வழிபடும் முறையும்… அதன் பலன்களும்…! நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு  பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி,  வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம்  வருபவர்.  

நவகிரகங்களை வழிபடும் முறையும்… அதன் பலன்களும்…! கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை வழிபடும் முறையும்… அதன் பலன்களும்…! ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். இதேபோல  ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். மேலும் இப்படி சுற்றுவது சரிதானா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. உண்மையில் நவகிரகங்களை இப்படித்தான் சுற்ற வேண்டுமா… நவகிரக வழிபாடு முறை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்… அப்படி சுற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்

ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அப்படி கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு விதமான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது.

குறிப்பாக நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான கருத்து பக்தர்களிடையே நிலவி வருகிறது.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும் என்றும் ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.

எனவே, இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.  அதேபோல எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும்  கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகம்.

கிரக வழிபாடும் பலன்களும்…  யோகம் தரும் நவக்கிரகங்கள்

  1. சூரியன் – ஆரோக்கியம்
  2. சந்திரன் – புகழ்
  3. செவ்வாய் – செல்வச் செழிப்பு
  4. புதன் – அறிவு வளர்ச்சி
  5. வியாழன் – மதிப்பு
  6. சுக்கிரன் – வசீகரத் தன்மை
  7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
  8. ராகு – தைரியம்
  9. கேது – பாரம்பரியப் பெருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *