புற்றுநோய்

கேன்சர் வருவதற்கான காரணமும் தடுக்கும் உணவு முறைகள்  தற்போது அனைவராலும் கொடிய நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்க்கு (கேன்சர் ) இதுவரை முழுமையான மருந்து என்று ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் சித்தர் பெருமக்கள் புற்று நோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாக கொடுத்துள்ளனர்.

கேன்சர் வருவதற்கான காரணமும் தடுக்கும் உணவு முறைகள்மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை

கேன்சர் வருவதற்கான காரணமும் தடுக்கும் உணவு முறைகள் புற்றுநோயால் பாதித்த செல்கள் சாதாரண செல்களைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்த செல்களை உடனடியாக அழிக்க கீமோதெரபி ஊசி செலுத்தும்போது அந்த மருந்தானது ஜீரண மண்டலம், தலைமுடி போன்ற இடங்களில் வளரும் நல்ல திசுக்களையும் தாக்கி தலைமுடி உதிரத் தொடங்குகிறது.

ஜீரண மண்டலமும் பாதிக்கப்படுவதால் நோயாளிகளுக்கு வாந்தி ஏற்படுகிறது. இதேபோல், ஆண் விறைப்பை திசுக்களும், பெண் சினைப்பை திசுக்களும் வேகமாக வளரக்கூடியவை என்பதால் கீமோதெரபியில் செலுத்தப்படும் மருந்து ஆண் என்றால் உயிரணு உற்பத்தியையும், பெண்என்றால் சினைமுட்டை உற்பத்தியையும் பாதிக்கிறது.கீமோதெரபி மருந்துகளால் ஈரல், சிறுநீரகம், இதயம் போன்றவையும் நெருக்கடிக்குள்ளாகிறது. கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை முறை மேற்கொள்ளும்போது நோயாளிகளுக்கு தாங்கமுடியாத தலைவலி, தசைவலி, வயிற்றுவலி, தோலில் மாற்றம், உடல் எடை மாற்றம், ரத்தம் உறைதல் போன்ற எண்ணற்ற பக்க விளைவுகளும் உண்டாகிறது. மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் வந்த பெண்கள் இவற்றை இழக்க நேரிடும்போதும் மனரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

கீமோதெரபியில் விலங்குகளிடமிருந்து எடுக்கப்படும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், சித்த வைத்தியத்தில் தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளே கொடுக்கப்படுகிறது. தேராங்கொட்டை, தாளித்த பத்திரி, நீரடி முத்து, வல்லாதகி போன்ற அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் வாதம், பித்தம், கபம் போன்றவற்றின் சமநிலைக்கேற்ப கொடுக்கப்படும்.இதுதவிர, உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. துளசி, மஞ்சள், வில்வம், லவங்கப்பட்டை, மிளகு, கொத்தமல்லிவிதை, இஞ்சி, கறிவேப்பிலை போன்றவற்றை மருந்தாக எடுத்துக் கொள்ளும்போது இவைகளே ஆன்டி ஆக்சிடென்டாக வினைபுரிந்து புற்றுநோய் செல்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் பக்க விளைவில்லாத இந்த மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், நோயாளிகளுக்கு யோகா, பிராணாயாமம், தியானம் போன்ற வாழ்வியல் படிப்பினைகளும் சொல்லித்தரப்படுவதால் இயல்பான வாழ்க்கையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் வாழமுடிகிறது. இதனால் அவர்கள் உளவியல்ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாவதில்லை.நாம் உண்ணும் உணவு, வாழ்க்கைமுறை என எல்லாவற்றிலும் அயல்நாட்டினரை பின்பற்றுவதால் அயல்நாட்டு மருத்துவத்துக்கும் நாம் அடிமையாகிவிட்டோம். இதைப் பயன்படுத்திக்கொண்டுதான் அயல்நாட்டு மருந்து கம்பெனிகள் லாபம் சம்பாதிக்கின்றன” என்கிறார்.ஆங்கில மருத்துவத்தில் வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராமநாதன்.‘‘இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆங்கில மருத்துவத்தில் எல்லாவகைப் புற்றுநோய்களுக்குமே தடுப்பு மருந்துகள் வந்துவிட்டன.

இதனால் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் வெகுவாகக் குறைந்திருக்கிறது. 70 சதவீத புற்றுநோய்கள் குணப்படுத்தக்கூடியவை என்பதையே ஆங்கில மருத்துவம் சொல்கிறது; அப்படியே செய்கிறது.உதாரணத்துக்கு பெண் குழந்தைகள் திருமண வயதை எட்டும்போதே கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதனால் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தவிர்த்துவிட முடியும்.அதேபோல் மார்பகப் புற்றுநோயை யும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே நோயின் தீவிரத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள புரட்சியால் புற்றுநோய் மருத்துவத்தில் முன் எப்போதையும் விட மேம்பட்ட சிகிச்சைகள் வந்து விட்டன. .

புற்றுநோயை தடுக்கும் உணவுகள்!

ஆளி விதையை முழுமையாகவோ, உடைத்தோ அல்லது எண்ணெய்யாகவோ உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள லிக்னன எனும் வேதிப்பொருள் மற்றும் ஃபைபர் புற்று நோய் ஏற்படுத்தும் செல்களுக்கு எதிராக செயல்படுகின்றன. ஆளி எண்ணெய்யை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

புற்று நோய்க்கு எதிராக செயல்புரியும் அல்லியம் எனும் வேதிப்பொருள் பூண்டில் இருக்கிறது. அதனால் தான் இத்தாலி, ஸ்பெயின், இந்தியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் உணவுகளில் பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிடுகிறீர்கள் என்றால் புற்று நோய் இல்லாத வாழ்க்கை வாழலாம்!

மாதுளை பழம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. மாதுளை பழத்தில் பாலிஃபினால் எனும் வேதிப்பொருள் இருப்பதால் அவை மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. மேலும் மாதுளை பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல குணநலன்கள் இருக்கின்றன.

தொடர்ந்து கிரீன் டி குடித்து வருகிறீர்கள் என்றால் மார்பக புற்றுநோய் பாதிப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் கிரீன் டி குடித்து வந்தால் புற்று நோய் தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு நலன்கள் உள்ளன.

எந்த வகை மிளகாய் என்றாலும் அவை கேன்சருக்கு எதிகார செயல்புரிபவை தான். சில்லி மற்றும் ஜலபெனோ பெப்பர்ஸ் கேன்சன் செல் வளர்வதை தடுக்கின்றன. பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாய் ஆகியவையும் மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்புரிகின்றன.

மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள கர்கியூமின் எனும் வேதிப்பொருள் மார்பக புற்று நோய், நுரையீரல், ஸ்கின் புற்று நோய் ஆகியவை வராமல் தடுக்கின்றன. கேன்சன் ஏற்படுத்தும் செல்களுக்கு எதிராக தீவிரமாக செயல்புரிகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *